அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ios 11 பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளடங்கியுள்ளன என்பதை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

ஆப்பிள் மேப்ஸ் – Apple Maps

கூகிள் மேப்ஸ்க்கு போட்டியாக ஆப்பிள் மேப்ஸ் வெளியிடப்பட்டது. ஆனால் கூகிள் மேப்ஸ் ஈடாக ஆப்பிள் மேப்ஸ் இல்லை என்று கூறலாம். எனினும் ஆப்பிள் ios 11 ல் பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்படுள்ளது.

apple ios 11 updates

குறிப்பிட்ட பாதைக்கான இன்லைன் வழிகாட்டுதல், வேக கட்டுப்பாட்டு தகவல்களை ஆப்பிள் மேப்ஸ் அளிக்கும். விமான நிலையங்கள் வணிக வளாகங்கள் போன்ற அரங்களின் உள்ளிருப்பு வழிகளையும் இதன் மூலம் காணலாம்.

தொந்தரவில்லா வாகன இயக்கம்

கார்களை இயக்கும்போது கவனத்தை சிதறடிக்காத வகையில் குறுஞ்செய்திகள், அழைப்புகளை தானியங்கியாக துண்டித்து விடும் அம்சம் (Do Not Distrub While Driving) இதில் இடம்பெற்றிருக்கிறது .

ஐமெசேஜ் செயலி

குறுந்தகவல் செயலிகளான வாட்சப், கூகிள் அலோ, பேஸ்புக் மெசென்ஜர்  போன்றவற்றிகு போட்டியாக iMessage செயலி புதிய வசதிகளுடன் வெளிவந்துள்ளது. imessage வழியாக உரையாடும்பொழுதே apple music போன்ற செயலிகளிலிருந்து தகவல்களை பகிரும் வசதி, Apple Pay யிலிருந்து பணம் அனுப்ப, பெறுகிற வசதியை பெற்றுள்ளது. மேலும் உரையாடலை மற்ற ஆப்பிள் சாதனங்களுடன் பரிமாறிக்கொள்ளவும், அதைத் தொடர்ந்து பயன்படுத்தும் வசதியையும் அளிக்கிறது.

ஆப்ஸ்டோர் – மறு கட்டமைப்பு

ஆப்பிள் ஸ்டோர் மீண்டும் புதியதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செயலியை திறக்கும்போது, அது குறித்த விபரங்களை கிராபிக்ஸ் தகவல்களாக காண முடியும். மேலும் டாப் செயலிகள், எடிட்டர் சாய்ஸ் போன்ற விபரங்களையும் பெற முடியும்.

ஆப் கன்ட்ரோல் சென்டர்

ஆப்ஸ்களை எளிதாக – வேகமாக பயன்படுத்த ஆப் கன்ட்ரோல் சென்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் உபயோகம், 3D டச்  இந்த இயங்குதள அப்டேட் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அழைப்புகள், மின்னஞ்சல் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் லாக் ஸ்-ஸ்கிரீன் நோட்டிபிகேசன் அமைக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் அசிஸ்டென்ட் சிரி மேம்படுத்தல்மனிதர்களுடன் பேசுவது போல, மொபைலுடன் பேசி பதில் வாங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சிரி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆங்கிலம், சீனம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் குரல்வழி மொழிபெயர்ப்பு  புத்திசாலித்தனமாக பதிலளிக்ககும் வகையில் மேன்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோ ஆப் :

போட்டோ – வீடியோ தரமானதாக அதே சமயத்தில் ஸ்டோரேஜ் அளவு குறைவாக இருக்க  இரண்டு புதிய பார்மட்கள் (HEVC , HEIF) அறிமுகப்படுத்தபட்டுள்ளது. லைவ் போட்டோ – வீடியோ எடிட் செய்யும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ipad – புதிய வசதிகள்

iOS 11 இயங்குதளம் ஐபாட்களில் செயல்படுக்கூடியது. இது ஐபாட்களை மேக் ரக கணினிகளைப் போன்றதொரு தோற்றத்தினை வழங்குகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் Drog and Drop வசதி எழுத்துகள் மற்றும் போட்டோக்கள் எளிதாக பரிமாற்றம் – இடமாற்றம் செய்ய உதவுகிறது. ஐபாட் ப்ரோ படைப்புத்திறனை மேன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் பயன்பாடு

ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பது ஸ்டோரேஜ் பிரச்னை. அதை தீர்க்கும் வித்தில் புதிய பார்மட்கள் HEIF, HEVC ஆகியவை iPhone 7 , iPhone Plus பயன்பாட்டார்களின் பைல் அளவை 50% வரை குறைத்து அதிக ஸ்டோரேஜ் பெற வழிவகை செய்கிறது.

கீபோர்ட் – நோட்ஸ் ஆப்

குறிப்புகள் எடுத்துக்கொள்ள உதவும் நோட்ஸ் ஆப்பில், டாகுமெண்ட்களை ஸ்கேன் செய்து, அதை எடிட் செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே கையில் மொபைல் பயன்படுத்தும் வகையில்  தானாகவே கீபோர்ட் அதற்கு தகுந்தாற் போல எண்கள், சின்னங்கள் போன்றவற்றை வேகமாக பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்கிரீன் ரெக்கார்டிங்:

ஆப்பிள் ஐபோனில்  செய்யும் செயல்களை அப்படியே ரெக்கார்டிங் செய்யும் வசதி iOS 11 ல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் சிறப்பு வசதிகள், மேம்படுத்தல் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தகவல்கள்:

ஆப்பிள் ஸ்மார்ட் கிளாஸ்
ஃபைல் மேனேஜ்மென்ட் மென்பொருள்
ஆப்பிள் போனில் ப்ளாக்கர் இணையதளம் பயன்படுத்த
Tags: Apple iPhone, Apple iPod, Apple iPad, Apple iOS 11, Specs of Apple iOS.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *