இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீடியோ பார்த்து வரும் இணையதளம் யூடியூப். நிறைய வசதிகள் இதில் இருந்தாலும், குறைந்த வேக இணையத்தில் வீடியோ லோட் ஆவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்.  பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வீடியோ பஃபர் ஆகி, பிறகு பிளே ஆகும். இதனால் வீடியோ பார்ப்பதற்கு ஒரு வித சலிப்பு உண்டாகும். இப்படி யூடியூப் வீடியோ Buffer ஆவதால் வீடியோ பார்ப்பதற்கு பொறுமையில்லாமல் போய்விடும். இதுபோன்ற பஃபர் பிரச்னை வராமல் செய்ய பிரௌசர் எக்ஸ்டன்ஸ்கள் உதவுகின்றன. அவற்றில்  “ஸ்மார்ட் வீடியோ” என்ற எக்ஸ்டன்சன் சிறப்பாக செயல்படுகிறது.

ஸ்மார்ட் வீடியோ எக்ஸ்டன்சன்:

கூகிள் – பயர்பாக்ஸ் பிரௌசர்களுக்கு இந்த நீட்சி கிடைக்கிறது. இதை பிரௌசரில் add செய்துவிட்டால் போதும். ஆட்டோமேட்டிக்காக லூப் எனேபிள் செய்யப்பட்டுவிடும்.

அந்த எக்சன்டன் மீது கிளிக் செய்து ஆப்சன் கிளிக் செய்யவும்.
இப்பொழுது தோன்றும் பக்கத்தில்  Start playing when buffered என்பதில் டிக் மார்க் ஏற்படுத்தவும். அதில் ஸ்மார்ட் பஃபர் தேர்வு (டிக்) செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

smartvideo buffering issue solved

முன்பை விட வீடியோ வேகமாகவும், பஃபர் ஆகாமல் தெளிவாக பிளே ஆகும்.

Full Screen எனேபிள் செய்யப்படாத வீடியோவை கூட இந்த எக்ஸ்டன்சன் மூலம் புல் ஸ்கிரீன் மோடிற்கு மாற்றிப் பார்க்க முடியும்.

ஸ்லோ நெட் கனெக்சன் உள்ளவர்களுக்கு இந்த எக்ஸ்டன் பயனுள்ளதாக இருக்கும்.
டவுன்லோட் செய்ய சுட்டி:
Download SmartVideo Extension

Tags: YouTube Fast loading option, YouTube Video, Youtube extension, YouTube Smart Video.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *