யூசர்களின் நன்மை கருதி வாட்சப் சமீபகாலமாக புதிய அப்டேட்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், வாட்சப்பில் வரும் முக்கியமான தகவல்களை, மிஸ் பண்ணாமல் படிப்பதற்கான வசதியை, வாட்சப் பீட்டா பதிப்பில் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு ஸ்டேடஸ் எடிட் வசதி, ஜிப் பைல் அனுப்பும் வசதி, அனுப்ப மெசேஜை திரும்ப பெறும் வசதி (Unsend) ஆகியவற்றை அளித்திருந்தது.

whatsapp chat pin vasathi
தற்பொழுது வெளியிட்ட புதிய வசதியின் மூலம், உங்களுக்கு வரும் முக்கியமான சாட் மெசேஜ்களை பின் (Pin)  செய்து வைத்துக்கொள்ளலாம். 
நாள்தோறும் சேரும் தேவையற்ற குப்பை மெசேஜ்களில் முக்கியமான மெசேஜ் படிக்க வேண்டுமானால், ஸ்கோரல் செய்து, சில நிமிடங்கள் செலவழித்து தேடிப் படிக்க வேண்டும். இனி, அந்த தொந்தரவு இல்லை. 
அலுவலக தொடர்புடைய மெசேஜ்கள், சொந்த அலுவல் தொடர்பான மெசேஜ்கள், கல்வித்தொடர்பான மெசேஜ்கள் போன்ற முக்கியமான தகவல்களை பின் செய்து வைப்பதால், அவற்றை உடனுக்குடன் தேவையானபொழுது படித்துக்கொள்ள முடியும். 

வாட்சப் சாட் மெசேஜை எப்படி பின் செய்வது?

whatsapp pin option
இதற்கு நீங்கள் புதிய பீட்டா வாட்சப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். வாட்சப் செயலி பதிப்பு 2.17.162 அல்லது அதற்கு மேல் உள்ளவற்றில் இந்த அப்டேட் உங்களுக்கு கிடைக்கும்.
அப்டேட் செய்த பிறகு, இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும். 
செய்முறை: நீங்கள் பின் செய்ய வேண்டிய இன்டிஜூவல் சாட் அல்லது குரூப் சாட் மீது சில நொடிகள் அழுத்திப் பிடித்தால் உங்களுக்கு Pin ஆப்சன் (சிம்பல்  தோன்றும்.  அதை டேப் செய்து பின் செய்துவிடலாம். இப்படி செய்வதன் மூலம் முக்கியமான “சாட்” தகவல்களை பின் செய்து வைத்துக்கொள்ள முடியும். 
இதனால் உங்களுக்கு எத்தனை மெசேஜ்கள் வந்தாலும், பின் செய்யப்பட்டவை மேலேயே காட்டப்படும். பல மேசேஜ்களை கடந்து, உங்களுக்குத் தேவையானதை ஸ்குவாரல் செய்து படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த வசதியை அதிக பட்சமாக 3 சாட் மெசேஜ்களை மட்டுமே “PIN” செய்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் பின் செய்ததை, மீண்டும் Unpin செய்யவும் முடியும்.

தொடர்புடைய செய்திகள்:

வாட்சப் பாதுகாப்பு அம்சங்கள்
வாட்சப் Unsend வசதி 
வாட்சப் நல்லதா? கெட்டதா?

Tags: Whatsapp tips, Whatsapp Tricks, Whatsapp tips and tricks, whatsapp 2017 updates, Whatsapp Chat Pin 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *