யூடியூப் புதிய அப்டேட்களை அவ்வப்பொழுது வெளியிட்டு வருகிறது. அந்த அப்டேட்கள் மூலம் வீயூவர்ஸ் புதிய வசதிகளை பெற முடியும். தற்பொழுது மொபைலில் பார்வர்ட், ரீவைண்ட் செய்வதை எளிதாக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை → வெளியிட்டுள்ளது. இடது பக்கம் டபுள் டேப் (Double Tap) செய்தால் பத்து செகண்ட் பின்னோக்கியும், வலது பக்கம் டபுள் டேப் செய்தால் பத்து செகண்ட் முன்னோக்கியும் வீடியோ ஓடத்துவங்கும்.
![]() |
YouTube Tips and Tricks in Tamil |
இதற்கு முன்பு வீடியோவை பார்வர்ட் செய்ய ஸ்கோரல் பாரை இழுத்தால், நினைத்ததுக்கு மேலாக டைமிங் சென்றுவிடும். இதனால் குறிப்பிட்ட செகண்ட்கள் மட்டும் வீடியோவை கடந்து பார்ப்பது சிரம்மாக இருந்தது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் மூலம் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது.
மேலும் சில யூடியூப் டிப்ஸ் & ட்ரிக்ஸ்.
உங்களுடைய யூடியூப் பக்கம் கலர்புல் பாண்ட்களாக மாற
சர்ச் பாக்சில் doge meme என்று டைப் செய்து பாருங்கள்.
சர்ச் ரிசல்ட் கலர்புல் பாண்ட்டாக மாறி கலக்கிடும்.
யூடீயூப் பக்கம் நீரில் மிதப்பது போல காட்சியளிக்க
use the force luke என்று டைப் செய்யுங்கள். உங்களது யூடியூப் பக்கம், நீரில் மிதப்பது போல காட்சியளிக்கும். பார்க்க வேடிக்கையாக, வித்தியாசமாக இருக்கும்.
கீபோர்ட் மூலம் யுடீயூப் இயக்க
கீபோர்ட் மூலமே வீடியோவை இயக்க www.youtube.com அடுத்து /leanback என டைப் செய்து என்டர் தட்டுங்கள். அதாவது www.youtube.com/leanback என கொடுத்து என்டர் கொடுத்தால், முற்றிலும் யூடீயூப் பக்கத்தை கீபோர்ட் மூலமே இயக்கலாம்.
யூடியூப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்
- வீடியோவை Play/ Pause செய்ய K பிரஸ் பண்ணுங்க
- பத்து செகண்ட் பார்ட்வர்ட் பண்ண L பிரஸ் பண்ணுங்க
- பத்து செகண்ட் ரீவைண்ட் பண்ண J பிரஸ் பண்ணுங்க
- சவுண்ட் மியூட் பண்ண M பிரஸ் பண்ணுங்க.
- சவுண்ட் அதிகம் வைக்க அப் ஏரோ யூஸ் ↑ பண்ணுங்க
- சவுண்ட் குறைக்க டவுன் ஏரோ ↓ யூஸ் பண்ணுங்க
- பார்வர்ட் பண்ண ரைட் ஆரோ → யூஸ் பண்ணுங்க
- ரீவைண்ட் பண்ண லெப்ட் ஆரோ ← யூஸ் பண்ணுங்க
இப்படி நிறைய டிப்ஸ் & ட்ரிக்ஸ் இருக்கு. பயன்படுத்திப் பாருங்க. ஆச்சர்யப்பட்டு போவீங்க.
தொடர்புடைய தகவல்:
யுடியூப் வீடியோ – ஆட்டோமேட்டிக் ரிப்பீட் செய்ய
YouTube To MP3 ஆக மாற்ற
ஈசியாக யுடூப் வீடியோ டவுன்லோட் செய்ய
Tags: Tamil YouTube Tricks, YouTube Tips, utube tips and tricks.