பேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் பிரபலமாக இருக்கும் சமூக இணையதளம் டிவிட்டர்.
ஆரம்ப காலத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவிய ட்விட்டர் தளத்தில் வீடியோ ஷேரிங், இமேஜ் ஷேரிங் உட்பட சில வசதிகள் கொடுக்கப்பட்டன.
![]() |
New premium video content coming to Twitter |
சமீபத்தில் “லைவ் வீடியோ” வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் “ப்ரிமியம் வீடியோ” வசதியை வெளியிடப்போவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
இதன்படி, பிரபலமான 200 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவைகள் வழங்கும் நிகழ்ச்சிகள், வீடியோ, விளையாட்டுகள், பொழுது போக்கு அம்சங்களை “பிரிமியம் வீடியோ” வாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
அந்த வீடியோக்களை கட்டணம் செலுத்தி பார்க்க முடியும்.
இதுவரைக்கும் ட்விட்டர் தளத்தில் மட்டும் 450 நிகழ்ச்சிகளை லைவ் வீடியோவாக ட்விட்டர் ஒளிப்பரப்பியுள்ளது. 800 மணி நேரம் ஓடிய அந்த லைவ் வீடியோவை 45 மில்லியன் பயனர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: New premium video content coming to Twitter, premium video, twitter update, twitter new update, twitter tips.