விண்டோசில் காப்பி பேஸ்ட் வசதி ஒரு மிகச்சிறந்த வசதி. தேவையான டெக்ஸ்ட் அல்லது படம் அல்லது கோப்புகளை காப்பி பேஸ்ட் செய்துகொள்ள இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது.

clipboard manager - word tips

காப்பி செய்யும்பொழுது என்ன நடக்கிறது?

ஒரு டெக்ஸ்டையோ அல்லது பைலோ காப்பி செய்யும்பொழுது, அது Clip Board ல் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு பேஸ்ட் செய்திடும்பொழுது தானாகவே அதிலிருந்து நீங்கி விடுகிறது.

2007 ற்கு பிறகு வந்த வேர்ட் செயலியில் காப்பி செய்யப்பட்டவை பட்டியலிட்டு காட்டப்படும். அதில் வேண்டியதை தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம்.

அதைப் போன்று பல மடங்கு வசதிகளை கொண்ட கிளிப்போர்ட் மேனேஜர் அப்ளிகேஷன்கள் தற்பொழுது  வந்துவிட்டன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

Click Cube – கிளிக் கியூப்

மேற்குறிப்பிட்ட வேர்ட் செயலியில் கிளிப் போர்ட் மூலம் ஒரு சில டெக்ஸ்ட்களை மட்டுமே பேஸ்ட் ஆப்சனிற்கு பெற முடியும். ஆனால் இந்த செயலியில் 2000 த்திற்கும் மேலாக டேட்டாக்கள் கிடைக்கும். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம்.
Downlaod Click Cube

கிளிப்போர்ட் பியூசன்:

அதிக டேட்டாக்களை காட்டுவதோடு, Replace ஆப்சன் மற்றும் பார்மட் பிரச்னை வராமல் உள்ளது உள்ளபடியே பேஸ்ட் செய்ய உதவுகிறது. இந்த எளிமையான செயலியை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Clipboard Fusion

கிளிப்போர்ட் மாஸ்டர்

அதிக வசதிகளை கொண்டு கிளிப்போர்ட் மேனேஜர் செயலி இது. பயன்படுத்துவது எளிது. இதில் 10000 டேட்டா வரை சேமித்து பயன்படுத்தலாம். அதிகமான டேட்டாவை பிரித்தெடுத்து பயன்படுத்த வழிகள் அதில் தரப்பட்டுள்ளன. இதில் டேட்டாவினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்திடும் வசதி உண்டு. இதனாலேயே இது ஒரு மிகச்சிறந்த கிளிப்போர்ட் மேனேஜர் என குறிப்பிடுகின்றனர்.
Download Clipboard Master

டிட்டோ கிளிப்போர்டு மேனேஜர்

பயன்படுத்த எளிமையானது. சேமிக்கப்பட்ட டேட்டாவினை தேடி பெறும் வசதி இதில் உள்ளது. நெட் வொர்க் வழியாக டேட்டாவினை பகிர்ந்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு. இது மிக க் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது.
Downlaod Ditto Clipboard Manager

தொடர்புடைய பதிவுகள்: 

குரோம் காப்பிலெஸ் பேஸ்ட் வசதி

Tags: Clipboard Manager, Word Tips, Clipboard, Clipboard Data, Copy Past Easy.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *