உலகத்தில் பில்லியன் கணக்கானவர்கள் வாட்சப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பெரும்பாலும் யோசிப்பதே இல்லை. அல்லது அசட்டையாக இருந்து விடுகிறார்கள். வாட்சப்பில் பல பயன்கள் இருந்தாலும், ஒரு சில பாதுகாப்பு அம்சங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் ஹேக்கர்களின் கையில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் சிக்கி, அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

whatsapp pathukappu amachangal


எப்படி வாட்சப் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது?

வாட்சப்பில் பகிரப்படும் போட்டோ, வீடியோ உட்பட பலதரப்பட்ட டேட்டாக்களை ஒரு சில வழிமுறைகளைப் பயன்படுத்தி பாதுகாத்திட முடியும்.

1. லாஸ்ட் சீன் 

வாட்சப் பயன்படுத்தும் அனைவருக்கும் இது தெரிந்திருக்கும். அது லாஸ்ட் சீன் ஆப்சன். வாட்சப்பில் இருக்கும் அனைவரும் இதை பார்க்கும்படி இருக்கம். இதை உங்களது கான்டாக்டில் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி செட்டிங்ஸ் அமைக்கலாம். இதனால் தொடர்பில் இல்லாதவர்கள் உங்களது தகவல்களை பார்க்க முடியாது. இந்த வசதியை செயல்படுத்திய பிறகு, உங்களது கான்டாக்டில் இருப்பவர்கள் மட்டுமே உங்களது புரோபைல் போட்டோ உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பார்க்க முடியும்.

whatsapp last seen

2. தொடர்பு கட்டுப்பாடு:

வாட்சப்பில் உங்களை யார் யாரெல்லாம் கான்டாக்ட் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரியாதவர்கள் தொடர்புகொள்ளும்போது, அவர்களை Block செய்து விடலாம். இதனால் தேவையற்றவர்களின் தகவல்கள், தொடர்புகள் தவிர்க்கப்படும்.

whatsapp contacts

3. தகவல் அனுப்பவதில் கவனம்

வீடியோ, போட்டோ, டாகுமெண்ட் உள்ளிட்ட தகவல்களை நண்பர்களுக்கு அனுப்பும்பொழுது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அனுப்ப வேண்டும். தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் அது பொதுவானதாக இருக்குமா என கண்டிப்பாக யோசிக்க வேண்டும். உறவினர்களுக்கு அனுப்பும்போது அப்படியே. அப்படி அனுப்பட்ட தகவல்கள் அவர்களை சென்றடைந்ததும், அழித்துவிடுவது நல்லது.

4. வாட்சப் புகார் அனுப்ப:

உங்களது வாட்சப் கணக்கை யாராவது டிராக் செய்கிறார்கள் என சந்தேகித்தால், தொடர்புடைய நபரை கான்டாக்ட் அது பற்றி கேட்கலாம். ஒவ்வொரு போனிற்கும் ஒரு செட்டிங்ஸ் இருக்கும். ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர் WhatsApp > Menu Button > Settings > About and help > Contact Us சென்று குறிப்பிட்டவரை தொடர்பு கொள்ள வேண்டும் ஐபோன்கள் பயன்படுத்துபவர்கள் WhatsApp > Settings > About and Help > Contact Us சென்று சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம் விண்டோஸ் போன் பயன்படுத்துபவர் என்றால், WhatsApp > more > settings > about > support என்ற ஆப்சனுக்கு சென்று புகார் அளிக்கலாம்

whatsapp reports

5. வாட்சப் கணக்கு தடை:

குறிப்பிட்ட எண்ணைப் பற்றி வாட்சப்புக்கு தொடர்ந்து புகார் அனுப்பட்டால், எந்த நேரத்திலும் அந்த கணக்கை வாட்சப் முடக்க அதிகாரம் உண்டு. இதனால் அந்த எண்ணிலிருந்து மீண்டும் வாட்சப் பயன்படுத்த முடியாது.

whatsapp banned

Tags: whatsapp tricks, whatsapp tips tamil, whatsapp security, whatsapp protection, whatsapp accounts, whatsapp hacking.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *