ரொம்ப நாளாவே ஒருத்தருக்கு சந்தேகம். மோடம்னா என்னா? ரௌட்டர்ன்னா என்ன? ரெண்டும் ஒன்னுதானா? இல்லே வேற வேறயா?

இப்போ கேட்டால், ரெண்டும் ஒன்னுதான் சொல்ல முடியும். இதுக்கு முன்னாடி வேற வேறயா? என்றால் ஆமாம் வேற வேறதான்.

wifi modam with router

என்ன குழப்பறீங்க.?

குழப்பமே இல்ல. இதுதான் தெளிவு. மோடம்னா வேற. ரௌட்டர்னா வேற.

மறுபடியும் குழப்பறீங்களே..?

இதுதான் உண்மை. மோடம்னா வேற. ரௌட்டர்னா வேற.

மோடம் என்பது ஒரே ஒரு ஐபி கொண்டு இன்டர்நெட் சேவை வழங்குநரால் கொடுக்கப்படுவது. அது இருந்தால்தான் இன்டர்நெட் நமக்கு கனெக்ட் ஆகும்.

அப்போ ரௌட்டர்ன்னா?

அது மோடத்திலிருந்து கிடைக்கிற ஐபி வச்சுகிட்டு, வேற வேற சாதனங்களுக்கு, (உதாரணமா லேப்டாப், ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட்டுக்கு) நெட்டை பிரித்து கொடுக்கும் உபகரணம். அப்படி பிரித்துக்கொடுக்கும்போது, ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு ஐ.பி அட்ரஸ் உருவாக்கி கொடுத்துடும்.

ரெண்டும் ஒன்னுன்னு சொன்னீங்களே?

ரெண்டும் ஒன்னுன்னா, ரெண்டு வசதியும் உள்ள ஒரு பெட்டி. Modem With Router. இப்போ எல்லாம் ஒரே பெட்டியில ரெண்டும் இணைந்த மாதிரிதான் இன்டர்நெட் சர்வீஸ் கொடுக்கிற நிறுவனங்கள் கொடுக்குது. வயர் மூலம் கனக்ட் பன்றதுன்னா அதுல 4 போர்ட் இருக்கும். இதை வச்சி 4 கம்ப்யூட்டருக்கு நெட் கனெக்சன் எடுத்துக்கலாம்.

modam router with 4 port

இதுலயே இன்னொன்னும் இருக்கு. அது வயர்லஸ் மோடம் (WiFi) மோடம். இதுல வேற வேற சாதனங்களுக்கு நெட்டை ஷேர் பண்ணிக்க முடியும்.

சமீபத்துல ரிலையன்ஸ் ஜியோ கூட ஒரு புது வயர்லஸ் மோடம்-ரௌட்டர் வெளியிட்டிருக்காங்க. அதுல USB கேபிள் மூலம் டெஸ்க்டாப், லேப்டாப் கம்ப்யூட்டருக்கு நெட் கனெக்ட் பண்ணிக்கலாம். அதுலயே வைபை வசதி இருக்கிறதால, 32 சாதனங்களுக்கு வைஃபை மூலம் கனெக்ட்பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. 32 ன்னா… அதுல ஆன்ட்ராய்ட் போன் இருக்கலாம். வைபை வசதி கொண்ட கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்ளட்னு எந்த ஒரு இணைய வசதி பயன்படுத்துற சாதனமாகவும் இருக்கலாம். எதை வேணும்னாலும் வைஃபை மூலம் கனெக்ட் பண்ணிக்கலாம்.

jiofi router with modem
JIO Router

இதுல தெளிவான ஒரு விஷயம் இதுதான். மோடம் இன்டர்நெட் கனெக்ட் பன்றதுக்கான சமாச்சாரம். மோடம் இல்லாட்டி நெட் கனெக்ட் பண்ண முடியாது.

ரௌட்டர் அதுல இருந்து வர்ற நெட்டை பிரித்து கொடுக்கிற சமாச்சாரம். இதை வச்சு நேரடியா இன்டர்நெட் கனெக்சன் கொடுக்க முடியாது.

இப்போ எல்லாம் ரெண்டுமே ஒன்னாக்கிதான் மோடம்ங்கிற பேர்ல கொடுக்கறாங்க. அதனாலதான் அந்த நண்பருக்கு அந்த குழப்பம் வந்திருக்கு. இப்போ கண்டிப்பா தெளிவாகி இருப்பாரு. உங்களுக்கு விளங்கிச்சா?

மறக்காம கமெண்ட் பண்ணுங்க. பிடிச்சிருந்தா FB, Twitter ல ஷேர் பண்ணுங்க.
useful tamil computer tips

Tags: What is Modem, Router Modem, Jiofi, Jiorouter, Internet modam, different between modem and router. wifi modem, wireless modem, wireless router, modem with router.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *