மொபைல் போன் எந்த நேரத்தில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். கையில் இருந்தால் உடனே அதை எடுத்துப் பயன்படுத்துவதே வழக்கமாக கொண்டுள்ளனர். மொபைல் போன் பயன்படுத்துவதிலும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அப்படி செய்வதன் மூலம் ரேடியேசன் – கதிர்விச்சிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

மொபைல் போனுக்கு சிக்னல் காட்டும் இன்டிகேட்டர் இருக்கும். அதில் அதிளவு சிக்னல் காட்டும்போது பேசினால் குறைந்த அளவு கதிர்வீச்சு வெளிப்படும்.

குறைந்த அளவு சிக்னல் காட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் அதிகளவு ரேடியேசன் வெளியேறி உடலை பாதிக்கும். எனவே குறைந்த சிக்னல் கிடைக்கும் பகுதிகளில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது

வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுது செல்போன் பயன்படுத்தக்கூடாது. பலருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தாலும், அவர்கள் அதை நடைமுறைபடுத்துவதே கிடையாது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு, உடல் மற்றும் போன் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது.

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

cellphone radiation echarikkai

செல்போன் வியாதிகள்

அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் ஒரு மன வியாதியின் பெயர் Nomophobia.

இது ஸ்மார்ட்போன் மூலம் நீண்ட நேரம் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உருவாவதுதான் நோமோ போபியா.

இது தீவிரமடையும்பொழுது, அந்த பயனாளர் தீவிரமாக ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிறார். அதீத மொபைல் பயன்பாட்டால் இந்நிலை ஏற்படுகிறது.

தூக்கத்தில் நடக்கிற வியாதி கேள்விப்படிருப்போம். அதே மாதிரிதான் அரை தூக்கத்தில் நண்பர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது. இதனால் தூக்கம் தடைபடுகிறது.

பெரிய ஸ்கிரீன் – பிக் பிராப்ளம்

பெரிய ஸ்கிரீன் மொபைல் பயன்படுத்துவது இப்பொழுது கலாச்சாரம் ஆகிவிட்டது. அதில் கேம் விளையாடுவது, படம் பார்ப்பது என்பது ஒரு கவுரம். ஆனால் பெரிய திரையிலிருந்து வெளிச்சம் தூக்கமின்மையை உருவாக்குகிறது. இதற்கு உடலில் உள்ள மெலடோனின் என்ற ஹார்மோன் உதவுகிறது.

அதிக வெளிச்சம் ஹார்மோன் செயல்பாட்டை அழுத்துகிறது. இதனால் தூங்க வேண்டும் என்ற எண்ணம் குறைகிறது. செல்போன் வெளிச்சம் மட்டுமில்லை. கம்ப்யூட்டர், தொலைக்காட்டி திரையிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான வெளிச்சம் இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்குகிறது.

ஆமை கழுத்து நோய்:

செல்போனை காதுக்கும் தோள்பட்டையும் இடையில் வைத்துக்கொண்டு பேசும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் “ஆமை கழுத்து” நோய் வருகிறது. இதன் விளைவாக கழுத்தில் அதிகப்படியான வலி உண்டாகும்.

செல்பி மேனியா:

சிலர் எப்பொழுது பார்த்தாலும் செல்பி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். தன் அழகை ரசிப்பதில் கொஞ்சமும் குறை வைக்க மாட்டார்கள். அடிக்கடி செல்பி எடுத்து சமூக இணையதளங்களில் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். இன்னதுக்குதான் செல்பி எடுப்பது என்ற வரையறையே செல்பி எடுத்துக்கொள்வார்கள். இதை செல்பி மேனியா என்று குறிப்பிடுகிறார்கள்.

தொடர்புடைய தகவல்கள்

செல்போன் மேனியா
மொபைல் பாதுகாப்பு
செல்போன் கதிர்வீச்சு ஆபத்து
Tags: Cellphone tips, Cellphone Radiation, Cellphone Tips, Mobile signal, Mobile Radiation, Social Awarness.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *