பொதுவாக ஒரு விஷயத்தில் அதிக பயன்கள் கிடைத்தால், அதில் சில நஷ்டங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் மொபைல் பயனபாட்டில் அப்படியில்லை. அனைத்து பயன்களையும் எந்த ஒரு பாதிப்பும் இன்றி பயன்படுத்தலாம். அதற்கு சில எச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

mobile phone protection

குறிப்பாக இணையத்தை பயன்படுத்துகையில் ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு நன்மை கொடுக்கும் இணையம்தான், தேவையற்ற தீமையையும் கொடுக்கிறது. எனவே இணையம் என்றாலே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

ஸ்மார்ட் போனின் இயக்க முறைமைகள் மிக எளிதாக ஹேக்கர்கள் தகவல்களை ஹெக் செய்வதற்கு வழிவிடுவதாக அமைந்திருப்பது வருத்தத்திற்குரிய விடயம். ஆப்பில் போன் ஐஓஎஸ் உடன் ஒப்பிடுகையில் ஆன்ட்ராய்ட் போனின் இயக்க முறைமைகள் வைரஸ் தாக்குதலுக்கு – ஹேக்கர்களுக்கு ஏற்றதாக, தாக்குதல் நடத்துவதற்கு வழிவிடுவதாக அமைந்திருக்கிறது. 
இதனால் ஆன்ட்ராய்டு போனிற்கான பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியதிருக்கிறது. 
வைரஸ் என்றாலே கம்ப்யூட்டரை தாக்கும் ஒரு எதிரி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். தகவல்களை அணுக முடியாமல் செய்யும் வைரஸ், பணம் கேட்டும் மிரட்டும் வைரஸ், திடீரென கம்ப்யூட்டரை இயக்க விடாமல் செய்திடும் வைரஸ் என அவற்றில் பல வகை உண்டு. இப்படிப்பட்ட வைரஸ் தொகுப்புகள் கம்பயூட்டருக்கு மட்டுமல்ல. ஸ்மார்ட் போனுக்கும் வந்துவிட்டது. 
mobile phone security
ஆனால் மொபைல் போன்களுக்கு எல்லாம் இது தேவையா என அலட்சியப்படுத்துவோர் நிறைய உண்டு. இப்பொழுது பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பல்வேறுபட்ட தகவல்களை சேமிக்க கூடிய வசதி வந்துவிட்டது. உதாரணமாக ஆபிஸ் டாகுமெண்ட், பேங்க் டீடெய்ல்ஸ், சொந்த வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்ட வீடியோ, போட்டோஸ், இமெயில் அட்டாச் செய்து அனுப்பிய பைல்கள் என பலவற்றை மொபைலில் சேமித்து வைக்கிறோம்.
குறிப்பாக மொபைல் போன் மூலமே இன்டர்நெட் பேங்கிங் செயல்பாடுகளை நிறையபேர் மேற்கொள்கின்றனர். எனவே மொபைல் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 
மொபைல் ஆன்ட்டி வைரஸ் என பார்க்கும்பொழுது Trend Micro Mobile Security & Antivirus, Avira Antivirus Security, AVL, Sophos Free Antivirus and Security, Avast Antivirus & Security ஆகியவை முதல் ஐந்து இடத்தில் இருக்கின்றன. இது தவிர நிறைய ஆன்ட்டி வைரஸ் செயலிகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பு அம்சங்கள் தேவைபடுகிறது என்பதைப் பொறுத்து ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்திடலாம். 
இவற்றில் சில இலவசமாக கிடைக்கின்றன. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய ஆன்ட்டி வைரஸ்தொகுப்புகளும் உண்டு. வசதிக்கேற்ப ஒன்றை தரவிறக்கி செயல்படுத்திடலாம். 
mobile phone hacker
மொபைல் ஆன்ட்டி வைரஸ் தொகுப்பின் செயல்பாடுகள்:
கம்ப்யூட்டரில் செயல்படும் ஆன்டி வைரஸ் போலவே இதன் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. பொதுவாக ஆன்டிவைரஸ்கள் மொபைலில் உள்ள கோப்புகளை விரைவாக ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆன்டிவைரஸ் செயலியின் முதல்படி இதுதான். அடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இயங்கி, போனை முழுவதும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைப்பது, ஸ்கேன் செய்வதினை வரை செய்வது, எந்தெந்த வகையான கோப்புகளை ஸ்கேன் செய்ய வேண்டுமென அமைப்பது போன்ற வசதிகளும் உண்டு. இந்த அமைப்புகளை செயல்படுத்தி பாதுகாப்பினை மேம்படுத்தலாம்.
போனில் உள்ள அப்ளிகேசனை மட்டும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கலாம். மெமரி கார்டை மட்டும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கலாம். போட்டோ கேலரி அல்லது டவுன்லோட் போல்டரை மட்டும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கலாம். இப்படி வசதிக்கு தகுந்தபடி ஸ்கேன் செய்வதினை செட் செய்திடலாம். 
பேக்ரவுண்டில் இயக்கம்: 
போனை பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, பின்னணியில் எந்த ஒரு தொந்தவும் இன்றி மௌனமாக ஆன்ட்டி வைரஸ் இயங்கும்படியும் செட் செய்திடலாம். அப்படி இயங்கும்போது முகப்பு பக்கத்தில் இயங்குவது தெரியாது.
பாதுகாப்பு மற்றும் ஆலோசனை வழங்கல்:
இதன் மூலம் போனில் உள்ள தேவையற்ற பாதிப்பு  தரும் வைரஸ் பைல்களை நீக்குதல், தகவல்களை திருடக்கூடிய சாத்தியமிருக்கும் பைல்களை கண்டு நீக்குதல் மற்றும் போனில் உள்ள பைல்கள் அனைத்தினையும் ஸ்கேன் செய்து, அவற்றில் பாதிப்பு தரும் பைல்கள் கண்டறிந்துத நீக்குவதற்கான ஆலோசனை வழங்கும் நிகழ்வும் நடைபெறும். மேலும் தனிநபர் தகவல்களை திருப்படக்கூடிய அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து எச்சரிக்கை செய்யும்.
ஆன்ட்டி வைரஸ் செயலி மேம்படுத்தல்:
ஆன்ட்டி வைரஸ் தொகுப்பினை தரும் நிறுவனங்கள், புதிய வைரஸ் தொகுப்புக்கு எதிரான குறியீடுகளை கொண்ட தொகுப்பினை மேம்படுத்தும். எனவே அதை தானாகவே ஏற்றுக்கொள்ளும்படி நம் போனில் உள்ள ஆன்ட்டி வைரஸ் தொகுப்பு செட்டிங்சை (Automatic Update அமைத்திட வேண்டும். 
செயல்வேகம் அதிகரிப்பு: 
வைரஸ் பைல்கள் நீக்குதல், கரப்ட் ஆன பைல்களை நீக்குதல், தேவையற்ற குப்பை பைல்களை நீக்குதல் போன்ற செயல்பாட்டால் போனின் வேகம் அதிகரிக்கிறது.
திருட்டிலிருந்து போன் பாதுகாப்பு: திடீரென உங்களது போன் திருடப்பட்டால், திருடியவன் உங்களது போனை அணுக தவறாக பேட்டர்ன் லாக்கை இரண்டு முறை உபயோகிக்கும்பொழுது, தானாவேக போனில் உள்ள முன்புற, பின்புற கேமிரா இயங்கி, போனை எடுத்தவர் மற்றும் அங்குள்ள சூழ்நிலை, திரையை ஸ்கிரீன் ஷாட் எடுக்கிறது. இதனால் போனை எடுத்தவனை ஈசியாக கண்டுபிடிக்கலாம். இந்த வசதி கட்டண மென்பொருளில் மட்டுமே உண்டு. 
அவிரா செய்யும் ஜாலம் : 
avira anti virus for mobile
போன் திருட்டப்பட்ட உடன், அது எங்கிருக்கிறது என கண்டறியும் வசதி சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் உண்டு. கூகிள் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு இந்த வசதியை கொடுத்துள்ளது. போன் தொலைந்ததும் இதற்கென உள்ள வெப்சைட்டில் லாகின் செய்து, அது தரும் வழிமுறைகளை பின்பற்றினால் தற்பொழுது போன் எந்த ஏரியாவில் உள்ளது என கண்டுபிடிக்க முடியும். மேலும் அதை லாக் செய்திடவும், அதில் உள்ள டேட்டாக்களை அழிக்கவும் முடியும். அவிரா ஆன்ட்டி வைரசில் இந்த வசதியின் மூலம் போன் இருக்கும் இடத்தை அறிந்தவுடன் மிகப்பெரிய ஒலியை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போன் திருப்பட்டுவிட்டது என்ற தகவல்களையும் ஸ்கிரீனில் காட்டும். இதனால் சுற்றி இருப்பவர்களின் கவனத்தை அது ஈர்க்கும். 
மொபைல்போன் பாதுகாப்பு:
எந்த வகையில் போனை பாதுகாத்திடலாம்? எந்த வகையான ஆன்ட்டி வைரஸ் பயன்படுத்திடலாம் என்பன போன்ற கேள்விகளுக்கு, ஒருநல்ல தரமான ஆன்ட்டி வைரஸ் என நீங்கள் கருதும் இணையதளத்தின் மூலம் ஒருஆன்ட்டி வைரசை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். குறிப்பாக ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள், அதற்கென உள்ள கூகிள் ப்ளே ஸ்டோரில் ஒரு நல்ல தரமான ஆன்ட்டி வைரஸ் செயலியை தேடி இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும். அதற்கு முன்பு அது குறித்த விமர்சனங்களை Review and Rating படித்து முழுமையாக தெரிந்துகொள்ளவும்.  இன்ஸ்டால் செய்வதோடு நின்றுவிடாமல், அந்த தொகுப்பு தரும் அப்டேட்டை அவ்வப்பொழுது நிறுவிக்கொள்ள வேண்டும். இதனால் புதியதாக வரும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். 
இணையத்தில் உலவும்பொழுது, திடீரென வரும் பாப்-அப் விண்டோவினை கிளிக் செய்துவிடக்கூடாது. பெரும்பாலும் அவை வைரஸ் இணையதளங்களாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. 
இலவச வைபை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இலவச மாக கிடைக்கும் வைபை இணைய இணைப்பின் மூலம் அதிகளவு வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்பு உண்டு. 
தற்பொழுது உள்ள இணைய உலகில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நிகழலாம். எனவே மொபைல் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு வேண்டும். அதுகுறித்த பாதுகாப்பு அம்சங்களை தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். அப்படி செய்வதே முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்யும். 
Tags: Mobile Security, Smartphone protection, Mobile Pathukappu, Mobile phone antivirus.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *