இருபது வருடங்களுக்கு முன்புவரை கற்பனையாக இருந்து வந்தவை எல்லாமே இன்று கண்முன்னே நிஜமாக மாறி உள்ளது. கற்பனா சக்திக்கு என்றுமே அதிக வலிமை உண்டு. அதை செயல்படுத்த நினைத்திருக்கிறார் பேஸ்புக் மார்க். அதுதான் Mind Reading Technology.
பேசினால், அப்படியே அதை டைப் செய்து கொடுக்கும் ஒலி உணரி தொழில்நுட்பம் வந்த பிறகு, பெரும்பாலும் டைப் செய்வது நின்றுவிட்டது. அந்த வகையில் நினைத்தாலே, என்ன நினைக்கிறோம் என்பதை அப்படியே டெக்ஸ்ட் ஆக டைப் செய்து கொடுக்கும் தொழில்நுட்பத்தை ஆராயக்கூடிய குழுவை அமைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நுட்பத்தின் மூலம் மூளையில் எண்ணுகின்ற எண்ணங்கள் டெக்ஸ்டாக பதிவேற்றப்படும். தோல் மூலம் ஒலிகளை உணர முடியும். அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள Regina Dugan என்பவரை தலைமை அதிகாரியாக கொண்ட 60 பேர் குழுவை பேஸ்புக் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId
இத்தொழில்நுட்பத்தின் மூலம் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்ய முடியும் என அக்குழு தெரிவித்துள்ளது.
நினைத்தது நடக்கும் என்று நம்புகிற நாம், நினைத்தது அப்படியே டெக்ஸ்ட் ஆகவும் மாறும் என நம்புவோம். ஆராய்ச்சியை தொடங்கியிருக்கும் குழுவினருக்கு நம் டெக்தமிழன் வலைத்தளத்தின் சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வோம்.
இதுபோன்ற தொழில்நுட்பத் தகவல்களை முகநூலில் பெற, எங்களது முகநூல் பக்கத்தை| லைக் செய்யுங்கள்.