ஒரு போட்டோவை அழகாக்க, அசிங்கமாக்க?,  பின்னணிகள் அமைக்க, பார்டர் அமைக்க, லைட்டிங் எஃபக்ட் கொடுக்க இப்படி இன்னும் விதவிதமான Effects கொடுக்கவும், புதிய படங்களை உருவாக்கவும் பயன்படும் மென்பொருள் போட்டோஷாப்.

photoshop tutorials pdf tamil

இந்த மென்பொருளை பயன்படுத்த கற்றுக்கொண்டால், நீங்களும் ஒரு தொழிற்முறை போட்டோஷாப் டிசைனராக பரிமளிக்கலாம். ஆனால் எங்கு அதை கற்றுக்கொள்வது? யார் கற்றுக்கொடுப்பார்கள்? அதற்கு கட்டணம்செலுத்த வேண்டுமா? அப்படியே கற்றுக்கொண்டாலும், அது முழுமையான போட்டோஷாப் அறிவை தருமா? என்ற கேள்விகள் எழாமல் இருப்பதில்லை. இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நமது டெக் தமிழன் வலைத்தளத்தின் முகநூல் பக்கத்தை, இதற்கு முன்பு லைக் செய்யாதவர்கள் லைக் பட்டனை கிளிக் செய்து விடுங்கள்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

கட்டணம் கொடுத்து, கம்ப்யூட்டர் படிப்பு படிப்பதெல்லாம் இப்பொழுது வேலைக்கு ஆகாது. தியரி படிப்பதால் ஒன்றுமே விளையாது. தெரிந்துகொள்ள முடியும். அவ்வளவுதான். படித்ததை செயல்படுத்தினால் மட்டும் அது பற்றிய நல்ல அறிவை, தெளிவை பெற முடியும். அந்த வகையில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள நிறைய டுடோரியல்கள் இருக்கின்றன. வீடியோக்களாக இருக்கின்றன. PDF பைல்களாக இருக்கின்றன.

adobe photoshop cc

உங்களுக்கு வசதி எப்படியோ அதை பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். வீடியோ டுடோரியலை பார்த்துக் கொள்வதை விட, PDF பைலாக இருக்கும் பைல்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால், வேண்டும்பொழுது எடுத்து பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் PDF ப்பைலகளாக கிடைக்கும் போட்டோஷாப் டுடோரியல்களை டவுன்லோட் செய்ய இணைப்பை இங்கு கொடுக்கிறோம்.

1. போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள இந்த Photoshop CS6 Tutorial உதவும்.

2. போட்டோஷாப்பில் உள்ள டூல்களைப் பற்றி அருமையா சொல்லியிருக்கிறார்கள் இந்த Basic Photoshop Tutorials லில்.

3. இந்த இணைய பக்கத்தில் Photoshop Cs டிப்ஸ் & ட்ரிக்ஸ்சை PDF பைலாக டவுன்லோட் செய்ய கொடுத்திருக்கிறார்கள்.

4. போட்டோஷாப் சிஎஸ்3 டுடோரியல் இங்கு PDF ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

இவை யாவும் அடிப்படைகளை கற்றுத் தெளிய கொடுக்கப்பட்டிருக்கும் டுடோரியல்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பவை.

5. போட்டோஷாப் பற்றிய அடிப்படை விளக்கங்களை கொடுக்கிறது Adobe Photoshop Tutorial

6. தமிழில் போட்டோஷாப் பிடிஎப் டவுன்லோட் செய்ய

தமிழில் வேண்டுமானால் கீழுள்ள இணைப்புகளை பயன்படுத்தலாம்.

தமிழில் போட்டோஷாப்
போட்டோஸாப் தமிழில்

இனி என்ன டுடோரியல்களை படித்துப் பார்த்து, தெரிந்துகொண்டு, போட்டோஷாப்பில் எக்ஸ்பர்ட்டாக ஆக வேண்டியதுதானே பாக்கி. அதற்கு முன்பு கட்டாயம் உங்களுடைய கம்ப்யூட்டரில் போட்டோஷாப் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

போட்டோஷாப் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Adobe Photoshop. 

இந்த இரண்டு வலைத்தளங்களும் தமிழில் போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொடுக்கிறது.

போட்டோஷாப் கற்றுக்கொடுக்க எண்ணற்ற வீடியோ டுடோரியல்கள் உண்டு. அவற்றையும் பயன்படுத்தலாம்.

Tags: Tamil Photoshop, Photoshop Tutorial PDF, Photoshop Tutorial in Tamil, Learn Photoshop in Tamil.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *