பேட்டரி இல்லாமல் லேப்டாப் இயக்க முடியும். இது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் கொஞ்சம் ரிஸ்க்தான். பேட்டரி சுத்தமாக இல்லாத நேரத்தில் இது மாதிரி செய்து பார்க்கலாம். அந்த மாதிரி நேரங்களில் திரைப்படம் பார்க்கலாம். பிரௌசிங் செய்யலாம். ஏன் ஆபிஸ் வேலை கூட செய்து முடிக்கலாம்.

முகநூல் பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட் கிடைக்க லைக் செய்யவும்.https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

how to use laptop without battery

பேட்டரி இல்லாமல் லேப்டாப் இயங்கச் செய்வது எப்படி?

பொதுவாகவே லேப்டாப்பில் இரண்டு வகையில் மின்சாரம் செலுத்தும் வழிகள் இருக்கும். ஒன்று  பேட்டரி. மற்றொன்று AC கரண்ட். பேட்டரி தீர்ந்த பிறகும், கூட இந்த AC கரண்ட் மூலம் லேப்டாப்பை இயக்கலாம். ஆனால் மின்சாரத்துடன் இயக்கும் முன்பு, அந்த லேப்டாப்புக்கான பவர் அடாப்டரைதான் யூஸ் செய்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் வேற அடாப்டரை பயன்டுத்தும்பொழுது மின் சக்தி செலுத்தும் அளவு விகித த்தில் பிரச்னை வரலாம்.

எனவேதான் லேப்டாப்பிற்கு கொடுக்கப்பட்ட பவர் அடாப்டரைதான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்பு உங்களுடைய லேப்டாப்பிற்கு கண்டிப்பாக ஒரு யூபிஎஸ் இருக்க வேண்டும். மின்சாரம் ஏற்ற இறக்கங்களால் லேப்டாப் பாதிக்கப்படாமல் இருக்கவும், திடீரென பவர் பிரச்னையால் செய்த வேலைகள் அழியாமல் இருக்கவும் இந்த UPS பயன்படும். மேலும் லேப்டாப் பவர் கோட்டை எப்பொழுதும் நீக்கக் கூடாது.

அவ்வாறு நேரடியாக பவர் செலுத்தி, பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, பேட்டரி தொடர்புகளை கையால் தொடக்கூடாது. அப்படி தொட்டால் மின்சாரத்தால் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆக, இது ஒரு ரிஸ்க் எடுக்கும் முயற்சிதான்.

பேட்டரி பிரச்னை ஏற்பட்டு, லேப்டாப் பயன்படுத்த முடியாத நிலையில், முக்கியமான வேலைகள் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்த முறையைப் பயன்படுத்தி வேலைகள் செய்யலாம். மற்றபடி பேட்டரியுடன் கூடிய லேப்டாப்தான் பாதுகாப்பு மிக்கது. உங்களுடைய வேலைகளும் எந்த பிரச்னையுமின்றி நடைபெறும்.

Tags: Laptop Battery, Laptop operate without Battery, Laptop Battery Problem, Laptop Battery Solution, Use Ac in Laptop.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *