பேஸ்புக், வாட்சப் தனியுரிமை கொள்கை பிடிக்கவில்லை என்றால் அதை பயன்படுத்த வேண்டாம் என பேஸ்புக் சார்பாக வாதாடிய வக்கீல் தெரிவித்துள்ளார்.

don't use facebook whatsapp

வாட்சப்பை பேஸ்புக் வாங்கியது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது வாட்சப் தனியுரிமை கொள்கையை மாற்றியுள்ளது. அதன்படி, வாட்சப் பயனர்களின் தகவல்களை பேஸ்புக் பயன்படுத்திக்கொள்ளும்.

உலகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. வழக்கில் பேஸ்புக் சார்பாக ஆஜரான வக்கில் வேணுகோபால், வாட்சப் தனியுரிமை கொள்கையை பிடிக்காதவர்கள் வாட்சப் மற்றும் பேஸ்புக் பயபடுத்த வேண்டாம். அந்த அக்கவுண்டை டெலிட் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இது தொடர்பான வழக்கொன்றில், வாட்சப் பயனர் தகவல்களை பேஸ்புக் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதன்படி பேஸ்புக் தற்காலிகமாக வாட்சப் பயனர் தகவல்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.

பேஸ்புக், வாட்சப் நிறுவனங்களுக்கு இந்தியா முக்கிய சந்தையாக விளங்குகிறது. இதனால்தான் பேஸ்புக் தனது தனியுரிமை கொள்கையை பயனர்களிடையே புகுத்த நினைக்கிறது. இந்திய பயனர்களின் தரவுகள் அந்நிறுவனத்திற்கு பயனுள்ளதாக இருப்பதாலேயே இப்படி நடந்துகொள்கிறது.

Tags: Tamil Tech News, Facebook tips, Whatsapp tips.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *