விண்டோஸ் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை தேடுவதற்கு, விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் எளிமையான வசதிகளை கொண்டுள்ளது.  பைல்களின் பெயரை கொடுத்து தேடுவது, பைல்கள் உருவாக்கப்பட்ட தேதியை வைத்து தேடுவது, பைல் டைப் வைத்து தேடுவது போன்ற வசதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

windows explorer - file finding tips

கம்ப்யூட்டரில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பைலின் பெயர் தெரிந்தால் அந்த பெயரை உள்ளிட்டு தேடலாம்.
குறிப்பிட்ட வகை கோப்பு வேண்டுமானால், அந்த கோப்பின் எக்ஸ்டன்சன் கொடுத்து தேடலாம்.
உ.ம். டெக்ஸ்ட் பைல் எனில் .txt என கொடுத்து தேடுவது.

நிறைய பைல்கள் உள்ளது. குறிப்பிட்ட நாளன்று மட்டும் உருவாக்கிய பைல்களை தேட வேண்டும். இதற்கு என்ன செய்வது?

இதற்கும் தேடுதல் வசதி உண்டு. எக்ஸ்ப்ளோரர் சர்ச் பாக்சில் Modified: எனக் கொடுத்து தேடினால், கீழுள்ளது போல select a date or date range என்ற காலண்டர் பட்டி தோன்றும். அதில் குறிப்பிட்ட தேதியை கிளிக் செய்தால், அந்த தேதியில் உருவாக்கப்பட்ட அனைத்து பைல்களையும் காட்டும்.

find file with date modified option

இதில் A long time ago, Earlier this year, Earlier this month Last week, Earlier this week, Yesterday என்பதை கிளிக் செய்தும் தேடலாம்.  கம்ப்யூட்டரில் கோப்புகளை தேட, இந்த முறை அதிக பயனுடையதாக இருக்கும்.

விண்டோஸ் 7, வின்டோஸ் 8, விண்டோஸ் விஸ்டா கணினிகளில் இந்த வசதியை பெற முடியும்.

தொடர்புள்ள இடுகைகள்:

விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்வது எப்படி?
விண்டோஸ் 8.1 டிப்ஸ் & ட்ரிக்ஸ்
வின்டோஸ் 10 ஷார்ட்கட் கீஸ்

Tags: Computer tips, Find File in Windows Explorer, Windows Explorer Search Option.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *