தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது BSNL.  கம்ப்யூட்டர், ஆன்ட்ராய்ட் போன், ஐபோன் களில் பயன்படுத்தும் வகையில் ‘டேட்டா மெயில்’ என்ற செயலியை உருவாக்கி உள்ளது.

data mail app to create indian language mail

தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என மொத்தம் ஒன்பது மொழிகளில், ‘E-Mail’ முகவரியை உருவாக்கலாம். இமெயில் உருவாக்க மொபைல் எண் மட்டும் இருந்தால் போதும். அந்த எண்ணை மட்டுமே  உள்ளிட்டு,  விரும்பிய மொழியில், விரும்பிய பெயருடன், இ -மெயில் முகவரியை உருவாக்கலாம்.

data mail app to create tamil email

இச் செயலியில் கூடுதல் அம்சமா ரேடியோ சேனல் உருவாக்கும் வசதியும் உள்ளது. இதைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான பெயரில் ரேடியோ சேனல் தொடங்கலாம்.

இதன் மூலம், தங்களது குரலில், செய்தி உட்பட எத்தகைய கருத்துக்களையும் பேசி ஒலிபரப்பலாம். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.

தமிழில் இமெயில் உருவாக்க பயன்படும் இந்த ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Tags: data mail app, bsnl data mail app, data mail android app, tamil email creating android app.

By admin

One thought on “தமிழ் இமெயில் செயலி ! [Data Mail App]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *