ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக கொடுத்த சேவைகளைத் தொடர்ந்து மலிவு விலை சேவைகளில் அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொடுத்தைவிட , பல மடங்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் சேவைகளை அளிப்பதில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

reliance ambani jio

இந்த அதிரடி திட்டத்தால் நடப்பு நிதி ஆண்டில் 60 சதவீத வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

மார்ச் 31 வரை இலவச சேவைகள் அளிக்கப்பட்ட வந்த நிலையில், அதைத்தொடர்ந்து பிரைம் மெம்பர் ஆவதின் மூலமாக மீண்டும் மூன்று மாதகாலத்திற்கு இலவச சேவையை அனுபவிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்கள் ரிலையன்சில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

எதிர்வரும் 2022 நிதி ஆண்டின் முடிவில் 200 பில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொலைப்தொடர்பு சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ மிக எளிதாக இந்த மைல்கல்லை அடையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags: Reliance Jio Offer, Tamil Reliance Jio Plans, Jio Service low cost, Reliance Ambani Jio, Jio 2017 plans.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *