அவசர அவசரமா 4G சிம் வாங்கி, போனில் பொருத்தி நெட் கனெக்ட்பண்ணினால் சிம் நாட் வொர்க்கிங் வரும். உடனே பயங்க அப்செட் ஆகிடாதீங்க. முதல்ல உங்க போன் 4G சப்போர்ட்டான்னு உறுதி பண்ணிக்கோங்க. 4G சப்போர்ட் பண்ணாம வாங்குவோமான்னு நீங்க கேட்கிறதும் புரியுது. இதைச் சொல்ல காரணம் என்ன ன்னா.. ஒரு சில போன்ல 4G சப்போர்ட்னு போட்டிருக்கும். ஆனால் உண்மையிலேயே அது சப்போர்ட் பண்ணாது.

jio sim not working solved

4 சப்போர்ட் பன்ற போன்தான். உறுதியா தெரியும்னா, அடுத்து போன்ல இருக்கிற சிம் ஸ்லாட்டை செக் பண்ணுங்க. ஒன்னு சிம்கார்டு சரியா ஸ்லாட் பொருந்திருக்காது. இல்லேன்னா அந்த ஸ்லாட் 4G க்கு உரிய ஸ்லாட்டா இருக்காது. ஒரு சில போன்ல 2 சிம் சிலாட் இருக்கும். அதுல ஒன்னு மட்டுமே 4G சப்போர்ட் பன்ற ஸ்லாட்டா இருக்கும்.

அதனால் எந்த ஸ்லாட் 4G க்கு உரியதுன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்புறம் யூஸ் பண்ணுங்க. சிம்மை ஸ்லாட்ல பொருத்தின உடனே, உங்களோட கருவியை ரீஸ்டார்ட் பண்ணுங்க. தேவைப்பட்டா மறுபடியும் ஒரு முறை சிம் கார்டை ரீமூவ் பண்ணிட்டு, போட்டுப் பாருங்க.

இப்போ சிம்கார்ட் சிக்னல் காட்டுதான்னு பாருங்க. டேட்டா ஆன்ல இருக்கான்னு ஒரு முறை செக் பண்ணிக்கோங்க. அப்படி இல்லாட்டி சிம் கார்ட் டேட்டா ஓப்பன் பன்றதுக்கு செட்டிங்ஸ் போய் செட் பண்ணுங்க.

கண்டிப்பா இப்போ சிம்கார்ட் ஒர்க் ஆகும். அப்படி இல்லேன்னா உங்க டிவைஸ் 4G க்கு சப்போர்ட் ஆகலேன்னு அர்த்தம்.

JIO Sim எப்படி செட் பன்றதுன்னு இந்த வீடியோ சூப்பரா சொல்லியிருக்காங்க. பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

[youtube https://www.youtube.com/watch?v=U3HCntJ5N74]

Tags: JIO Sim Network settings, JIO not working?, Jio 4G network setup, 4G Jio sim problem, Fix Jio Sim issue.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *