ஒரு அறையையே அடைத்துக்கொண்டிருந்த பெரிய பெரிய கம்ப்யூட்டர் எல்லாம் பயன்படுத்திய காலம் போய், சிறிய ரக பர்சனல் கம்ப்யூட்டர்கள் வந்தன. அவற்றை எல்லாம் மிஞ்சிடும் வகையில் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் வீட்டில் அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் நாளடைவில் காணாமல் போனது. லேப்டாப் கம்ப்யூட்டரிலும் சிறிய வகை கம்ப்யூட்டர்கள் வந்தன.

intel computing card | Mini Computer

அவற்றை எல்லாம் விரட்டி அடிக்க ஸ்மார்ட்போன் வந்தது. டேப்ளட் வந்தது. இருப்பினும் கம்ப்யூட்டரின் இடத்தை அவற்றால் முழுமையாக பூரத்தி செய்ய முடியவில்லை. கம்ப்யூட்டருக்கு இணையாக அவைகளால் வளரமுடியவில்லை.  அவைகள் தகவல் தொடர்பு மற்றும் இணைய உலவலுக்கு மட்டுமே பயன்பட்டன. இவற்றைவிட அட்வான்சாக, அதே சமயம் விலை குறைவாகவும், மிக மிக சிறியதாகவும் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என இன்டெல் நிறுவனம் விரும்பியது.  அதைச் செயல்படுத்திட இன்டெல் நிறுவனம் கிரடிட் கார்ட் அளவே கொண்டு மிகச்சிறிய கம்ப்யூட்டிங் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிரடிட் கார்டின் அளவு 0.73 மி.மீ. இந்த மினி கம்ப்யூட்டரின் அளவு 95x55x5 மி.மீ.

ஒரு கம்ப்யூட்டர் இயங்க தேவையான அனைத்தும் இதில் இடம்பெற்றிருக்கும். Intel Kaby Lake processor, மெமரி, நெட்வொர்க் இணைப்பு, ஸ்டோரேஜ் நினைவகம், புளுடூத் ஆகிய வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது. இனி பெரிய பெரிய பெட்டிகள் தேவையில்லை. இந்த சிறிய கம்ப்யூட்டிங் கார்ட் இருந்தால் மட்டும் போதும். எல்லா கம்ப்யூட்டிங் வேலைகளையும் இதில் செய்யலாம்.

இதில் பவர்போர்ட், USB போர்ட் எதுவும் இல்லை. மெமரி கார்டு செருகி பயன்படுத்துவதைப் போல அந்தந்த சாதனங்களில் செருகி பயன்படுத்தினாலே போதும்.

ஒவ்வொரு டிஜிட்டல் சாதனத்திலும் இதைப் பயன்படுத்தலாம். இனி லேப்டாப்பிற்கு வேலையே இல்லை. இந்த கம்ப்யூட்டிங் கார்டு மட்டும் இருந்தால் போதும். எல்லாமே இதில் செய்யலாம்.

வீட்டில் இருக்கும் டிஜிட்டல் வீட்டு உபோயக பொருட்களிலும் இதைப் பயன்படுத்தி இயக்க வைக்கலாம்.

இன்டெல் திட்டப்படி உலகெங்கும் இந்த கம்ப்யூட்டிங் கார்ட் மிக விரைவில் பயன்படுத்தப்படும். கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் கம்ப்யூட்டரை தயாரிக்காமல், இதற்கான சாதனங்களை மட்டும் தயாரித்தால் போதுமானது. அதற்கான முயற்களில் இன்டெல் இறங்கியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *