தற்பொழுது போட்டோ எடிட்டிங் வேலைகள் செய்வது ரொம்ப சுலபம். சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் போட்டோஷாப் – புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த வேலைகளை, தற்பொழுது வெளி வந்திருக்கும் சின்ன சின்ன மென்பொருள்கள் – டூல்கள் – பிளகின்கள்  மூலம் மிக எளிதாக செய்துவிட முடிகிறது. அது மட்டுமா? ஒரு புரோபசனல் போட்டோ கிராபிக் டிசைனர் செய்யும் அளவிற்கு போட்டோ டிசைன் செய்யக்கூடிய மென்பொருட்கள் – டூல்கள் வந்துவிட்டன.

photo editing software

விதவிதமான எஃபக்ட்கள் – Multiple Photo Effects, விதவிதமான பான்ட்கள் (Various Fonts), பேக்ரவுண்ட்கள் –  Backgrounds என எல்லாவற்றையும் ஒரு சில கிளிக்குகள் செய்து நினைத்த டிசைனை நிமிட நேரத்தில் கொண்டு வந்துவிடலாம்.

அதுபோன்ற ஒரு அருமையான போட்டோ எடிட்டிங் மென்பொருள் (Plugin) கூகிள் நிக். இந்த மென்பொருள் முன்பு கட்டண மென்பொருளாக  இருந்தது. தற்பொழுது கூகிள் இலவசமாக தரவிறக்க கொடுத்திருக்கிறது.

இதைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான போட்டோக்கோளை எடிட்டிங் செய்து, விருப்பமான டிசைன்களை அமைத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழலாம்.

இந்த பிளகின் பற்றி கூகிள், “Easily create the photos you’ve imagined with six powerful plug-ins for Photoshop, Lightroom, or Aperture” என குறிப்பிட்டுள்ளது.

போட்டோநிக் டூல் மூலம் செய்யப்படும் போட்டோ பில்டரிங் வேலைகள்:

Analog Efex Pro, Silver Efex Pro, Color Efex Pro, Viveza, HDR Efex Pro, Sharpener Pro, Dfine

photo editing software free

சமூக இணையதளங்களில் விவிதமான போட்டோஸ், மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்பவர்கள் போட்டோ பிரியர்கள் என அனைவரையும் பயன்படும் டூல் இது.

இந்த மென்பொருள் Windows, Mac கம்ப்யூட்டர்களுக்கு கிடைக்கிறது.

குறிப்பு: இந்த டூலை நிறுவுவதற்கு – Install உங்கள் கம்ப்யூட்டரில் போட்டோஷாப் சிசி – Photoshop cc  அல்லது ஏதேனும் அடோப் போட்டோஷாப் மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

கூகிள் நிக் மென்பொருள் தரவிறக்கம் செய்ய சுட்டி:

Tags: Photo Editing Software, Free google Nik Photo Editing software, Free Photo editing software google Nik. Photo editing tool google nik, Google Nik collection Tool, Nik Plugin for Adobe Photoshop.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *