இரவு நேரத்தில் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக வேகம் குறைகிறதென்றால் அதில் கண்டிப்பாக ஏதோ விசயம் இருக்கும். எதனால் வேகம் குறைகிறது? எப்படி அதை கண்டறிந்து சரி செய்வது என்பதை பார்ப்போம்.

internet speed slow fix

சாதாரணமாக இணையவேகம் குறைவதற்கு சில காரணங்கள் உண்டு. இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர்களால் (isp) ஏற்படும் பிரச்னை. அடுத்து நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூன்யத்தால் கூட இருக்கும். எப்படி என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்பு டெக் தமிழ் வலைத்தளத்தின் அப்டேட் பேஸ்புக்கில் உடனுக்குடன் கிடைக்க எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

ஷேரிங் இன்டர்நெட் கனெக்சன்:

நீங்கள் ஒரு ஷேரிங் இன்டர்நெட் இணைப்பை பெற்றிருந்தால், மாலை நேரங்களில் கண்டிப்பாக இணைய வேகம் குறையும். பெரும்பாலான மக்கள் மாலை நேரங்களில் இணையத்தைப் பயன்படுத்துவதுதான் இதற்கு காரணம். இதற்கு தீர்வு என்பது இல்லை.

வானிலையில் ஏற்படும் மாற்றத்தால் கூட உங்களுக்கு இன்டர்நெட் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். மோசமான வானிலையால் வயர்லஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

speed increase internet tips

சிக்னல் குறுக்கீடு:

ரிசீவர் ஆன்டெனாவில் ஏற்படும் வெப்ப மாற்றம் சமிக்சை குறுக்கீடுகளால் இணைய வேகம் குறைய வாய்ப்பு அதிகம். ரவுட்டர் வைத்திருக்கும் இடம், பொசிசன் பொறுத்தும் இணைய வேகம் குறையும். சரியான இடத்தில் சரியான பொசிசனில் ரவுட்டை வைத்தால் போதுமான சிக்னல்களை பெற முடியும். குறிப்பாக ரவுட்டர் உயரமான இடத்தில் வைத்திருப்பது கட்டாயம். அப்போதுதான் தேவையான சிக்னல்களை ரீசீவ் செய்யும்.

ரவுட்டர் பொசிசன்ஸ் :

router position for increasing net speed

பல சாதனங்களை ரவுட்டரில் இணைக்கும்பொழுது தானாகவே இணைய வேகம் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் ரவுட்டரின் திறன் அளவிற்கு குறைவான சாதனங்களையே அதில் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு புதிய அப்டேட் செய்யப்பட்ட ரவுட்டரை வாங்குவது புத்திசாலித்தனம்.

எக்ஸ்டன்சன்:

இது கூட இணைய வேகம் குறைய காரணமாக இருக்கும்.தேவையான எக்ஸ்டன்சனைத் தவிர மற்றவற்றை டிசேபிள் செய்து பிரௌசரை பயன்படுத்தினால் இணைய வேகம் அதிகரிக்கும்.

browser extension internet speed

Tags: slow internet connection, fix net slow problem, slow internet connection, speedup internet.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *