எப்பொழுதாவது ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். குறிப்பாக மாணவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு இந்த வசதி தேவைப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஆடியோவை ப்ளே செய்து, ஒவ்வொரு வரியாக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. ஒரு சில நிமிடங்கள் என்றால் அந்த வழியில் முயற்சிக்கலாம். ஆனால் அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

speech to text tool online

நேரடியாக ஆடியோவை அப்படியே டெக்ஸ்ட் பைலாக மாற்றக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? அந்த வசதியை ஏற்படுத்தித் தருகிறது ஒரு இணையதளம்.

இந்த இணையதளத்தில் ஆங்கில உட்பட உலகின் சில முக்கிய மொழிகளில் ஆடியோ பைல்களை டெக்ஸ்ட் பைலாக மாற்றிக்கொள்ளலாம்.

முகவரி: Speech to Text

இந்த இணையதளத்திற்குச் சென்று நீங்கள் டெக்ஸ்ட் பைலாக மாற்ற வேண்டிய ஆடியோவை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் முடிந்த பிறகு தானாகவே டெக்ட்ஸ்ட்  பைலாக கீழே உள்ள பெட்டியில் கன்வர்ட் ஆகும். ஆடியோ முடிந்த பிறகு, உருவாக்கப்பட்ட டெக்ஸ்ட் பைலை காப்பி செய்து, சேமித்துக்கொள்ளலாம்.

இது ஒரு அருமையான ஆன்லைன் டூல். நேரடியாக மைக்ரோ போன் மூலம் பேசியும், அந்த பேச்சை டெக்ஸ்ட் பைலாக கன்வர்ட் செய்யும் வசதியும் உண்டு.

சப்போர்ட் செய்யும் லாங்வேஜ்கள்: Arabic, English, Spanish, French, Brazilian Portuguese, Japanese, மற்றும் Mandarin. தமிழ் மொழிக்கு இந்த வசதி இல்லை.

இந்த வசதி எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

[youtube https://www.youtube.com/watch?v=JWnLgZ58zsw]

இந்த பதிவு பற்றிய சந்தேகங்களுக்கு கமெண்ட் பண்ணவும். பிடித்திருந்தால் FB, Twitter, Google Plus -ல் ஷேர் செய்யவும்.

Tags: Speech to Text, Voice into written word, Speech to Word, Speech to Text Online Tool, Speech text converting tool. Convert Speech to Text.

By admin

One thought on “ஆடியோ டூ டெக்ஸ்ட் பைல் [Convert Human voice into Text]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *