6 மாதங்களாக 4G சேவையை இலவசமாக கொடுத்து புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ, அடுத்த மாதம் முதல் ரீசார்ஜ் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

reliance jio paytm plan

ரீசார்ஜ் மிக எளிதாக செய்வதற்காக Paytm உடன் இணைந்துள்ளது ரிலையன்ஸ். இனி பேடிம் மூலம் அனைத்து பிளான்களுக்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

பேடிம் தனது பங்கிற்கு கஷ்டமர்களுக்கு ஒரு ஆபர் வெளியிட்டுள்ளது. 499 ரூபாய் பிளைனை ரீசார்ஜ் செய்தால், அதற்கு ரூபாய் 30 தள்ளுபடி செய்யும் சலுகையை அறிவித்துள்ளது. My JIO, Jio Website இரண்டில் மட்டும்தான் ஜியோ ரீசார்ஜ் செய்யும் வசதி இருந்தது. தற்பொழுது பேடிஎம்  லும் அந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளதால், நினைத்த நேரத்தில் உடனடியாக ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இப்போதைய சலுகையை தொடர்ந்து பெற வரும் 31ஆம் தேதிக்குள் ரூ.99 வருடக்கட்டணமாக செலுத்தி மெம்பர்ஷிப் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப ரூ.303 அல்லது ரூ.499 என்று ரீசார்ஜ் செய்து 4ஜி இண்டர்நெட் உள்பட அனைத்து சலுகைகளையும் தங்கு தடையின்றி அனுபவிக்கலாம். ரூ.303க்கு தினமும் 1GB இண்டர்நெட் டேட்டாவும் ரூ499க்கு தினமும் 2GB இண்டர்நெட் டேட்டாவும் பெற்று கொள்ளலாம்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆரம்பித்து கொள்ளலாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் பிளான்களை சமாளிக்க அதன் போட்டி நிறுவனங்களான வோடோபோன், ஏர்டெல், ஐடியா உள்பட ஒருசில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தினமும் 1GB இண்டர்நெட் டேட்டா, அளவில்லா அழைப்பு வசதி போன்ற கவர்ச்சியான பிளான்களை அறிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *