ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும்.  மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது.

இதனையடுத்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது. அதாவது, ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது.

jio prime plans

அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவை பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் பிரைம் இல்லா வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகைகள் வேறு வகைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் திட்டமாக, பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு 200ஜிபி டேடாவை உபயோகிக்கலாம் என்றால், பிரைம் இல்லா சந்தாதாரர்கள் ரூ.19க்கு 100ஜிபி டேடாவை மட்டுமே உபயோகிக்க முடியும்.

வெளியான புதிய திட்டங்களின் கீழ், ரூ.149க்கு ப்ரைம் சந்தாதாரர்கள் ஒரு மாத காலம் எந்தவித தினசரி டேட்டா எல்லை பயன்பாடும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற முடியும்.

மற்றொரு பேக் ஆன ரூ.499/-ன் கீழ் அதே வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் தினசரி 2ஜிபி என்ற டேட்டா பயன்பாடு எல்லை கொண்ட 60ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.303/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 28ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.499/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 56ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.999/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு டேட்டா வரம்பு இல்லாமல் 60ஜிபி டேடாவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதை தவிர, பிற சலுகைகளாக 90 நாட்களுக்கு 125ஜிபி வரம்பற்ற டேடா ரூ.1,999/-க்கும், 180 நாட்களுக்கு 350ஜிபி வரம்பற்ற டேடா ரூ.4,999/-க்கும், 360 நாட்களுக்கு 750ஜிபி வரம்பற்ற டேடா ரூ.9,999/-க்கும் வழங்கப்படுகிறது.

தொடர்புள்ள இடுகை: ஜியோ சேவைகளை 2G/3G போன்களில்  பயன்படுத்துவது எப்படி?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *