பேஸ்புக் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு அது அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தக் காரணம் அதில் உள்ள வசதிகள்தான். தகவல் பரிமாற்றம், வீடியோக்கள் மற்றும் முகம் பார்த்து பேசுதல் போன்ற வசதிகளின் காரணமாக அது இந்த உச்சநிலையை எட்டி உள்ளது.

facebook dislike tamil

மேலும் ஒரு சில பகுதிகளில் உள்ள பிரச்னைகளை போக்க, மக்கள் ஒரு இடத்தில் ஒன்று திரண்டு போராடவும், வலைத்தளங்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றின் செய்தித் தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லவும் கூட இந்த முகநூல் ஒரு அடித்தளமாக உள்ளது.

பேஸ்புக்கின் பயனர்கள் அதிகரிக்க அதிகரிக்க, அதில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் ‘டிஸ் லைக்’ ஆப்சன் வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக் ஆரம்பித்த நாள் முதல் இந்த வசதியை கொடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் பயனாளர்கள் அதிகம் அதை விரும்ப மாட்டார்கள் என்பதுதான்.

தற்பொழுது பேஸ்புக் மெசென்ஜரில் மட்டும் புதிய டிஸ்லைக் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவு – ஸ்டேட்டஸ் பிடிக்கவில்லை என்றால் அதை டிஸ் லைக் செய்து தெரிவிக்கலாம்.

இந்த டிஸ்லைக் ஆப்சனானது நல்லதா? கெட்டதா? என பயனாளர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்துதான் தெரியவரும். சில நேரங்களில் நல்ல பதிவுகளுக்கு கூட அதிக டிஸ்லைக் விழுவது உண்டு. அதுபோன்ற டிஸ்லைக்குகள் திட்டமிட்டு சிலரால் செய்யப்படுபவை. இதனால் அதிக டிஸ்லைக் வாங்கி பதிவுகள் பின்னோக்கி தள்ளப்பட்டு, மோசமான பதிவுகள் முன்னணியில் வருவதும் உண்டு. இதன் காரணத்தாலேயே இத்தனை நாட்களும் பேஸ்புக்க டிஸ்லைக் வசதி கொண்டு வர யோசித்தது.

தற்பொழுது பயனாளர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்த இரண்டாவது வசதியையும் பேஸ்புக் கொண்டு வந்துள்ளது. நிச்சயமாக நல்ல பதிவுகள் அதிக லைக்குகளைப் பெற்றுத்தரும். மோசமான பதிவுகளுக்கு விருப்பமின்மையை தெரிவிக்க டிஸ்லைக் உதவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *