தமிழ் மின்னூல்களை படிப்பது எப்படி? | Tamil Minnool padipathu Eppadi ?

நிறைய பேர் ஆர்வத்தில் தமிழ் மின்னூல்களை (Tamil E-books) டவுன்லோட் செய்துவிடுவர். ஆனால் அவற்றை எப்படி எந்த செயலிகளைப் பயன்படுத்தி படிப்பது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவிடும் பதிவு இது.

tamil minnool padippathu eppadi

தமிழ் மின்னூல்கள் பெரும்பாலும் PDF, Epub வடிவில் இருக்கும். பிடிஎப் வடிவில் இருக்கும் கோப்புகளை படிக்க சாதாரண PDF ரீடர் இருந்தாலே போதும். Electronic Publishing எனப்படும் இபப் (.epub ) கோப்புகளைப் படிக்க சில செயலிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பரிந்துரைக்கபடும் செயலிகள்: 

  • iOS கருவிகள்  எனில் iBooks for iPad (.epub), Kindle for iPad (.mobi), Google Play Books. பயன்படுத்தலாம்.
  • ஆண்டிராய்டு கருவிகள் எனில் ePub for Android, FBReader for Android, Google Play Books பயன்படுத்தலாம்.
  • குரோம் உலாவி  எனில் Readium.org தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.
  • பயர்பாக்சு உலாவி எனில் epubread.com தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.
  • Google Play Books மூலம் கணினியிலும் அனைத்து இயக்குதள கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கலாம். ஆண்டிராய்டு கருவியில் தானியக்கமாக நூல்களை ஒலித்துக் கேட்கவும் முடியும்.
  • FBReader மூலம் Windows, Linux, Blackberrt, Mac முதலிய பல்வேறு இயக்குதளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும்.

மேற்கண்ட வழிமுறைகளில் .ebub தமிழ் மின்னூல் களை எவ்வித சிரமும் இல்லாமல் படிக்க முடியும்.

By admin

One thought on “தமிழ் மின்னூல் படிக்க உதவும் செயலி [App To Read Tamil E-Book]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *