கம்ப்யூட்டர் கீபோர்டில் ஒரு விசையை அழுத்தினவுடனேயே தொடர்ச்சியா அதே எழுத்துகள் டிஸ்பிளே ஆகுதா? அப்படின்னா கீபோர்ட்லதான் பிரச்னை இருக்கும்.

keyboard repairing

1. கீபோர்டில் டீ, காபி போன்ற திரவங்கள் பட்டால், கீ ஆனது அழுத்தியவுடன் மேலெழும்பாமல் ஒட்டிக்கொள்ளும். அதனால் தொடர்ச்சியாக ஒரே எழுத்து வந்து கொண்டே இருக்கும்.

அல்லது ஒரே எழுத்துகள் ஐந்தாறு முறை வந்த பிறகு மேலெழும்பி விடும். அரைகுறையாக கீயானது அழுத்திய நிலையில் இருந்த பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். அப்போது எழுத்துகள் வருவது  தானாகவே நின்றுவிடும்.  இதனை நிறுத்த வேண்டுமானால், அழுத்தப்பட்ட விசையை மேலே தூக்கி விட வேண்டும். கீபோர்டில் உள்ள ஒட்டும் தன்மை கொண்ட திரவங்களை காட்டன் கொண்டு  நன்றாக துடைக்க வேண்டும்.

2.  கீபோர்டில் ஏதாவது லூஸ் கான்டாக்ட் இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க கூடும். அதனால் கீபோர்ட் விசைகள் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.

3. வைரஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால் இதுபோன்ற தொடர்ந்து ஒரே எழுத்து பல முறை டைப் செய்யப்படும் பிரச்னை ஏற்படும். சில விசைகளை தட்டினாலும், அதற்குரிய எழுத்துகள் விழாமல் இருக்கும். இதைத்தீர்க்க நிச்சயமாக நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் -ஐ பயன்படுத்தி கம்ப்யூட்டரை “ஸ்கேன்” செய்திட வேண்டும்.

4. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருட்களில் உள்ள வலுக்களாலும் (Software Bugs) வரலாம். கீபோர்ட் பட்டன்களில் உள்ள ஏதேனும் கனெக்சன் லூஸ் கான்டாக்ட் இருந்தாலும், இது போன்று ஏற்படும். அதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

பெரும்பாலும், கீபோர்டில்தான் பிரச்னை இருக்கும். கீபோர்டில் உள்ள தூசிகள், அழுக்குகள் போன்றவற்றை சுத்தம் செய்தாலே போதும் இதுபோன்ற பிரச்னைகள் 90 சதவிகிதம் தீர்க்கபட்டுவிடும். அனைத்தும் செய்து பார்த்த பிறகும் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டால், புதிய கீபோர்ட் மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

கம்ப்யூட்டர் பயன்படுத்தும்பொழுது என்னென்ன செய்யக்கூடாது? என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கம்ப்யூட்டர் பயனர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *