கம்ப்யூட்டர் ரேடியசனிலிருந்து கண்களை பாதுகாத்திட உதவும் கண்பாதுகாப்பு பயற்சிகள்:

தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு அளிப்பதில்லை. இதனால் வெகு விரைவில் கண்கள் பாதிக்கப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க போதுமான இடைவெளியில் கண்களை கம்ப்யூட்டர் திரையிலிருந்து விலக்கி வேறு திசைக்கு பார்வையை செலுத்த வேண்டும்.

eye exercises

இதற்கு 20-20 பார்முலா உதவும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை தூரத்திலிருக்கும் பொருளின் மீது பார்வையை செலுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி, உடலுக்கு பயிற்சி அளிப்பது போல கண்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் கண்கள் தேவையான புத்துணர்வு பெறுகிறது.

கண்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி?

  • கண்களை இரு புறமும் பக்கவாட்டில் (கிடைமட்டம்) முடிந்த அளவிற்கு கடைசி வரைக்கும் பார்வையை செலுத்துதல்
  • கண்களை மேலும் கீழும் அசைத்து (செங்குத்தாக) பார்வையை செலுத்துதல்
  • கண்களை வலது புற தோள்பட்டையிலிருந்து இடதுபுற கால் பட்டையை நோக்கி மேலிருந்து கீழாக செலுத்துதல்.
  • கண்களை இடது புற தோள்பட்டையிலிருந்து வலதுபுற கால் பட்டையை நோக்கி மேலிருந்து கீழாக செலுத்துதல்.
  • கண்களை வட்ட வடிவில்(இடது – வலது)  சுழற்றுதல்.
  • கட்டை விரலை கண்களுக்கு அருகாமையில் வைத்து நேர்கோட்டில் தூரத்திற்கு கொண்டு செல்லுதல். 

இப்படிப்பட்ட பயிற்சிகள் செய்வதன் மூலம் கண்கள் நல்ல புத்துணர்ச்சி பெறும்.

கண்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவில் அழகாக செய்து காண்பித்துள்ளார்கள். பார்த்து பயன்பெறவும்.

[youtube https://www.youtube.com/watch?v=yzg94Iamm_c]

தொடர்புடைய இடுகை: கம்ப்யூட்டர் பாதிப்பிலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி? 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *