ஃபிளேப்பி பேர்ட்’ எனும் மொபைல் விளையாட்டை நினைவிருக்கிறதா? எளிதாக இருந்தாலும், ஒரு போதும் வெற்றிகொள்ள முடியாத அளவு சிக்கலானதாக இருந்து, ஸ்மார்ட்போன் பிரியர்களைப் பித்துப் பிடிக்க வைத்த ஒரு விளையாட்டு.

ninja spinki challenges

இந்த விளையாட்டை உருவாக்கிய வியட்நாம் வடிவமைப்பாளர் புதிதாக ‘நிஞ்சா ஸ்பிங்கி’ எனும் புதிய மொபைல் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார். இந்த விளையாட்டும் ஃபிளேப்பி பேர்ட்’ போலவே எளிதாக இருந்தாலும் சவால் விடக்கூடியதாக இருக்கிறது.

30 கட்டங்களைக் கொண்டதாக இருக்கும் இந்த விளையாட்டில், நிஞ்சா எனும் சிறுமியை ஒவ்வொரு கட்டமாக முன்னேற்றிக்கொண்டு செல்ல வேண்டும். முதல் கட்டத்தில் சிறுமி பெரிய பூனைகளால் அடிபடாமல் காத்து அழைத்துசெல்ல வேண்டும்.

அடுத்த கட்டத்தில் சதுரத் தடைகளை அழித்து அவரை அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு அறிமுகமாயிருக்கிறது இந்த விளையாட்டு.

மேலும் விவரங்களுக்கு: Install Ninja Spinki Challenge

தொடர்புடைய இடுகை: ஸ்மார்ட் போனில் ஸ்டோரேஜ் தீர்ந்துவிட்டால் செய்ய வேண்டியவை 

By admin

One thought on “நிஞ்சா ஸ்பிங்கி [Mobile Game]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *