பென்டிரைவ் என்பது தகவல்களை சேமிக்கும் ஒரு சேமிப்பகமாக மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் அது சேமிப்பகமாக மட்டும் அல்ல.. கம்ப்யூட்டருக்கே எமனாகவும் மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு. ஒரு நல்ல தரமான பென்டிரைவை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால் கம்ப்யூட்டர் கீழுள்ள வீடியோவில் காட்டப்பட்டது போல பென்டிரைவ் செருகியதும் கம்ப்யூட்டர் ஆப் ஆகிவிடும்.

இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் உண்மை. USB டிரைவ் எப்படி கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யும்? என சந்தேகிப்பவர்கள் கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.

[youtube https://www.youtube.com/watch?v=_TidRpVWXBE]

வித்தியாசமான சில USB களை பயன்படுத்தும்பொழுது மர்மமான முறையில் கம்ப்யூட்டர் செயலிழந்துவிடும். இதற்கு காரணம்,  USB டிரைவ்களை கம்ப்ய்யூட்டர் USB Port களில் செருகும்பொழுது, அதிக மின்சாரம் பாய்வதால் தான். இதனால் கம்ப்யூட்டரை ஷட்டவுன்  ஆகிறது. அல்லது முழுவதுமாகவே செயலிழந்து போகிறது.

மின்சாரம் இல்லாமல் USB Drive வேலை செய்ய முடியாது.  USB டிரைவ் ஒரு வளைய மின் சுற்றில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் . இந்த செயல்பாடு நடந்து கொண்டிருக்கும் வரைக்கும் சாதனங்கள் உடைக்கப்பட (செயலிழக்க) வாய்ப்புண்டு. இதனால் ஏற்படும் பாதிப்பை சில சமயங்களில் தடுக்க முடிவதில்லை. இதைத் தடுக்க  மர்மமான முறையில் இயங்கும் இதுபோன்ற USB டிரைவ் / பென்டிரைவ்களை  பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நல்ல தரமான பென்டிரைவ்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.

தொடர்புடைய இடுகை: பென்டிரைவ் செயல்படும் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *