இது ஒரு சிம்பிளான கம்ப்யூட்டர் டிப்ஸ் தான். ஆனால் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் கம்ப்யூட்டர் சேமிக்கப்பட்டிருக்கிற போல்டர்கள் மற்றும் பைல்களுக்கு ரீநேம் கொடுக்க வேண்டியதிருக்கும்.

ஒரே சமயத்தில் பல போல்டர்களுக்கு அல்லது பைல்களுக்கு ரீநேம் கொடுக்க வேண்டி வந்தால், ஒவ்வொரு பைல் மீதும் ரைட் கிளிக் செய்து Rename கொடுக்க வேண்டும்.

folder rename easy way tamil tips

அப்படி இல்லாமல் சுலபமாக செய்ய ஒரு வழி இருக்கிறது.

  • ரீநேம் செய்யப்பட வேண்டிய போல்டரை திறந்து கொள்ளுங்கள்.
  • முதலில் உள்ள பைலை செலக்ட் செய்து F2 ஃபங்சன் கீயை அழுத்துங்கள்.
  • இப்போழுது பைலின் நேம் தேர்வு செய்யப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய பெயரை கொடுத்துவிடவும்.
  • பிறகு, அப்படியே டேப் கீயை அழுத்துங்கள்.
  • அது அடுத்த பைலுக்கு ஓடிவிடும். இப்பொழுது அந்த பைலுக்கும் ரீநேம் கொடுங்கள். 
  • இப்படியே டேப் அழுத்திக்கொண்டே வேண்டிய பைல்களுக்கு தொடர்ச்சியாக  ஒரே நேரத்தில் ரீநேம்  கொடுத்துவிடலாம்.

இதே போல பல போல்டர்களுக்கும் ரீநேம் கொடுக்கலாம்.

1. ரீநேம் செய்யப்பட வேண்டிய முதல் போல்டரை தேர்வு செய்து F2 கீயை அழுத்தவும்.
2. ரீநேம் செய்வதற்கான வசதி தோன்றும். அதில் வேண்டிய பெயரை கொடுக்கவும்.
3. அதன் பிறகு அப்படியே டேப் கீயை அழுத்தவும்.
4. அது அடுத்த போல்டருக்கு ரீநேமிங் ஆப்சனை கொடுக்கும்.
5. அதற்கும் ரீநேம் கொடுக்கவும். தொடர்ச்சியாக இப்படியே செய்யலாம்.

வேண்டிய போல்டருக்கு ரீநேம் கொடுக்கலாம்.  ஒரு சில போல்டருக்கு ரீநேம் தேவையில்லை என்றால், டேப்பை அழுத்தினால் போதும், அது அடுத்துள்ள போல்டருக்கு சென்று விடும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படும். அதே சமயம் ஒரே சமயத்தில் எவ்வித சிரமம் இல்லாமல் Rename கொடுத்து விடலாம்.

தொடர்புள்ள இடுகை: வேலை செய்யாத கம்ப்யூட்டர் பட்டன்களை சரி செய்வது எப்படி? 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *