வானம் பார்த்து நேரம் கூறிய காலம் மாறி, வாட்ச் பார்த்து நேரம் தெரிந்துகொண்ட காலம் மாறி, நேரம் பார்க்க கூட ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் தலைமுறைக்கு மாறிவிட்டோம். ஸ்மார்ட் போன் இல்லையென்றால் எந்த வேலையும் நடக்காது இந்த சந்ததியினருக்கு, அப்படிப்பட்ட ஸ்மார்ட் போனில் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் முக்கியமான ஆப்களை பார்ப்போம்.

1. வாட்ஸ் ஆப் (Whatsapp) :

வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான செயளிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதன் மூலம் நண்பர்களுக்குள் தகவல்களை பறிமாறி கொள்ளவும், போட்டோ, வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. இதன் முக்கியத்துவமே குரூப் மெஸேஜிங் தான். பலரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் ஒரு குரூப்பில் அனைவருக்கும் தகவலை அனுப்பலாம். இதனால் நேரமும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல் வாய்ஸ் மெஸேஜ் கூட அனுப்பலாம். இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த வாட்ஸ் ஆப் தற்போது பெரியவர்கள், அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டது.

2. ட்ரூ காலர் (True Caller):

யார் அழைக்கிறார்கள் என்பதை சொல்லும் ‘ட்ரு காலர்’ ஸ்மார்ட் போன் பயனர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பது தெரிய இந்த ஆப்-ஐ பயன்படுத்தலாம். நமக்கு தெரியாத அல்லது நம் காண்டாக்டில் இல்லாத நபர்கள் அழைத்தால் அவர்களின் பெயர்களை காண்பிக்க உதவுகிறது. ஆனால், இந்த ஆப் நம்முடைய ஸ்மார்ட் போனில் உள்ள காண்டாக்டை உபயோகித்தே மற்றவர்களுக்கு பெயர்களை காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது இண்டர்நெட் இருந்தால் மட்டுமே அழைப்பு வரும்போதே பெயரை காண்பிக்கும்.

3. ஃபேஸ்புக் (Facebook) :

ஒருவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் அவரின் நண்பரை பார்க்க தேவையில்லை, அவரது ஃபேஸ்புக் பக்கத்தை தான் பார்க்க வேண்டும். ஃபேஸ்புக் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். ஃபேஸ்புக் முதலில் கணிணியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பே பிரபலமான ஃபேஸ்புக், ஆப் வரிசையிலும் முதன்மையான  இடத்தில் உள்ளது. இதன் முக்கியத்துவம் பல வருடங்களுக்கு முன்பு தொடர்பை இழந்தவர்கள் கூட ஃபேஸ்புக் மூலமாக இணையலாம். செய்திகள், விளையாட்டு, பக்கங்கள், ஃபேஸ்புக் காலிங் என பல சேவைகளை கொண்டுள்ளது.
 
4. ஹைக் (Hike) :

பெயரிலே இணைப்பை கொண்டிருக்கும் ”ஹைக்” ஆப், வாட்ஸ் ஆப்பை போல நண்பர்களை இணைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் ஃபேஸ்புக்கில் உள்ள டைம்லைன் வசதியும் இதில் உள்ளது. அண்மையில், ஹைக் மெசஞ்சர் புரோகிராமில் ‘Hidden Mode’ என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளி ரகசியமாக கருதும் chat-ஐ மறைத்து வைத்துக்கொள்ளலாம். ஹைக்கின் முக்கியத்துவமே அதிலுள்ள ஸ்டிக்கர்ஸ் தான். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு ஸ்டிக்கர்ஸ்  இதில் இருக்கிறது. ரஜினி, ஷாருக்கான் மட்டுமில்லாம்ல் பல பிரபலங்களின் டயலாக்குகளும் இதில் உள்ளது.

5. ஸ்கைப் (Skype):

 ஸ்கைப் ஆப் தொலைதொடர்ப்பு மென்பொருள்களில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. தொலைதூரத்தில் உள்ள உறவினர்களை, நண்பர்களை நேரில் பார்த்து பேசுவது போல் வீடியோ காலிங் ஆப்சனை கொண்டது ஸ்கைப். ஸ்கைப்-ஐ ஸ்மார்ட் போன் மட்டுமல்லாமல், மடிக்கணினியிலும் பயன்ப்டுத்தலாம். ஸ்கைப் பயன்படுத்த ஃப்ர்ண்ட் கேமரா உள்ள மொபைல் தேவை. மற்ற தொலைபேசி, அலைபேசி கட்டணங்களுடன் ஒப்பிடும் போது இதில் கட்டணம் மிகவும் குறைவு. இலவச சேவைகளும் ஸ்கைப்பில் உள்ளது.

6. பேடிஎம் (Paytm) :

இணையத்தின் வழியாக நடைபெறும் பண பரிமாற்றங்களை ஒருங்கிணைக்கும் இணையதளம் பேடிஎம். ஸ்மார்ட் போன்களுக்காக பேடிஎம் ஆப் உருவாக்கப்பட்டது. கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்யாமல் இணையத்தில் எளிமையாக ரீசார்ஜ் செய்ய உதவுகிறது பேடிஎம். பேருந்து பயணச்சீட்டு பதிவு செய்வது போன்ற பல சேவைகளும் இதில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஷாபிங் தளமாகவும் செயல்படுகிறது.

7. சோமாட்டோ (Zomato):

உங்கள் பகுதியில் இருக்கும் உணவகங்களை கண்டறியவும் இணையத்தின் மூலம் உணவு வகைகளை முன்பதிவு செய்யவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். இதனை ஆன்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எந்த பகுதியில் இருந்தாலும் நமக்கு அருகில் என்னனென்ன உணவகங்கள் உள்ளது என்று காண்பிக்க உதவுகிறது சோமாட்டோ ஆப். இதன் மூலம் உணவகங்களில் சுவைத்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு பதிவிடலாம்.

8. டி யூ பேட்டரி சேவர் (DU Battery Saver) :
 
 ஸ்மார்ட் போன்களில் பேட்டரி சீக்கரமாக குறைகிறது என்ற கவலை அனைவருக்குமே இருக்கிறது. இண்டர்நெட் உபயோகிக்காமல் இருக்கவும் முடியாது, பேட்டரியும் குறையக்கூடாது என்பவர்கள் போனில் கண்டிப்பாக டி யூ பேட்டரி சேவர் இருக்கும். இந்த ஆப் உங்கள் பேட்டரி நீடித்து உழைக்க உதவுகின்றது. இதன் உதவியுடன் உங்கள் ஆண்ட்ராய்ட் போனுக்கு கூடுதலாக 50 சதவிகித ஆயுளை கொடுக்க முடியும்.

உங்கள் போனை வேகப்படுத்தவும், பேட்டரியை அதிக நேரம் உழைக்க செய்யவும் உதவுகின்றது. இதனால் நாள்முழுவதும் இண்டெர்நெட் பயன்படுத்தவும், திரையை பிரகாசமாக காட்டவும் பேட்டரியை இயங்க செய்யகின்றது. இந்த பேட்டரி சேவர் அப்ளிகேஷன் குரல்வழி கட்டளை வசதியை பயன்படுத்தி இயக்கவும் நிறுத்தவும் முடியும் என்பது கூடுதல் நன்மை.

9. ரிங்டோன் மேக்கர்:

இலவச ரிங்டோன் மேக்கர் மென்பொருளானது உங்கள் ஸ்மார்ட் போனிற்கு வித்தியாசமான, உங்கள் அபிமானத்திற்கு ஏற்ப ரிங்டோன்களை உருவாக்க ஒரு மிகவும் எளிமையான ஆப். இதனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பாடலின் பிடித்த வரிகளை மட்டும் மொபைலின் ரிங்டோனாக மாற்ற இயலும். இது ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏற்ப தனித்தனி ரிங்டோன்கள் வைக்கவும் உதவுகிறது.

10. பிக் கொலாஜ்:

பிக் கொலாஜ் பல போட்டோக்களை வெட்டி ஒட்டி ஒரே படமாக்க உதவும் ஸ்மார்ட் போன் ஆப். இதில் பயனாளிகளுக்கு பிடித்த பல போட்டோக்களை கொலாஜ் போட்டோவாக்க முடியும். அதுமட்டுமில்லால் இதில் ஸ்டிக்கர்ஸும் உள்ளது. தேவையான ஸ்டிக்கர்ஸை கட்டணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். இலவச ஸ்டிக்கர்ஸும் இதில் உள்ளது. எத்தனை போட்டோவை வேண்டுமானாலும் இதில் எடுத்து வெவ்வேறு grid உபயோகித்து வித்தியாசமாக கொலாஜை உருவாக்கலாம். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *