ஸ்மார்ட்போன்கள் தற்போது தரம் உடைய கேமிராவுடன் வெளிவருவதால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு கேமிராமேனாகவே மாறிவிடுகின்றனர். குறிப்பாக செல்பி கேமிராமேன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் தரமாக இருக்கின்றதா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

photography in cellphone tamil

புரபொசனல் கேமிராவில் எடுப்பது போன்ற அவுட்புட் மொபைல் கேமிராவில் வருவதில்லை என்று பலரும் ஏங்குவதுண்டு. குறிப்பாக மொபைல் போன் கேமிராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கும்போது முதலில் கோணத்தை சரிசெய்ய வேண்டும், பின்னர் சரியாக போகஸ் செய்து க்ளிக் செய்ய வேண்டும். மிக முக்கியமாக க்ளிக் செய்யும்போது கைகள் ஷேக் ஆகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவுட்புட் மங்கலாக கிடைக்கும்.

இந்த குறையை நீக்குவதுதான் IS என்று கூறப்படும் இமேஜ் ஸ்டெபிலைசேஷன். இந்த இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உங்களுடைய வேலையை எளிதாக்குகிறது. ஒரு வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கும் முன்னர் தெளிவான நிலையை இந்த இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்டு வந்துவிடுவதால் அவுட்புட் மிக அபாரமாக இருக்கின்றது. இந்த இமேஜ் ஸ்டெபிலைசேஷன் இரண்டு வகைப்படும். ஒன்று ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றொன்று எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்.

இந்த இரண்டு வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்: 

பொதுவாக DSLR கேமிராவில் போட்டோ எடுப்பது போன்று மொபைல் போன்களில் போட்டோ எடுப்பது எளிதல்ல. மொபைல் போன் கேமிராவில் சென்சார் அளவில் மிகச்சிறியதாக இருக்கும். இதனால் புகைப்படம் தெளிவாக விழுவதற்கான வெளிச்சத்தை பெற முடியாது. இந்த சமயத்தில்தான் ஆப்டிக்கல் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உதவுகிறது. மேலும் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது கைகள் ஷேக் ஆவது நார்மல்தான்.

ஆனால் சிறிய அளவு ஷேக்குகளை இந்த ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சரிசெய்து விடுகிறது. இதனால் தெளிவான புகைப்படம் கிடைக்க இது உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஓரளவுக்குத்தான் ஷேக்கை சரிசெய்யும். நீங்கள் ஓடிக்கொண்டே புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் அல்லது ஏதாவது வாகனங்களில் சென்று கொண்டே புகைப்படம் எடுத்தால் அந்த ஷேக்கை சரிசெய்ய இது உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்: 

இதுவும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்றே ஷேக் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. ஆனால் இந்த முறை கொஞ்சம் எலக்ட்ரானிக் இதற்கு உதவுகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் என்பது முழுக்க முழுக்க மெக்கானிக்கில் நடப்பது போன்று இந்த முறையில் ஷேக் ஆவதை தடுப்பது ஒரு சாப்ட்வேர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் புகைப்படம் எடுக்கும்போது ஷேக் ஆவதையோ, அல்லது லைட்டிங் எபெக்ட்டையோ இந்த சாப்ட்வேர் சரிசெய்து விடுகிறது.

எனவே உங்களுக்கு தெளிவான புகைப்படம் அல்லது வீடியோ கிடைக்கின்றது. இதில் கூடுதல் ஒரு நன்மை என்னவெனில் கூடுதலாக ஹார்ட்வேர் எதுவும் இதற்கு தேவையில்லை மேற்கண்ட இரண்டு வழிமுறைகளும் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களுக்கு தந்தாலும் நீங்கள் போக போக ஷேக் ஆகாமல் புகைப்படம் எடுப்பது என்பதை பிராக்டீஸ் செய்து கொள்ள வேண்டும் என்பதும் இங்கே முக்கியம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *