மக்கள் இனி ஆதார் பே சேவையின் வழியாக பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

aadhar pay

வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ”நாம் ஆதார் பே சேவையினை துவங்க உள்ளோம் இதற்காக மக்கள் அவர்களுடைய போனை  உபயோகப்படுத்த தேவை இல்லை எந்த வியாபாரிகளிடமும் அவர்களுடைய ஆதார் எண்ணைக் கூறி பயோமெட்ரிக்

வழியாக பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்” எனக் கூறினார்.

‘ஆதார் பே’ வழியாக இனி பணமில்லை பரிவர்த்தனை..!

14வங்கிகள் இந்த ஆதார் பே சேவையில் இணைந்துள்ளதாகவும் ஏனைய வங்கிகளிடம் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்
மத்திய அரசின் பீம் செயலி, யுபிஐ உள்ளிட்டவை ஏற்கனவே இதில் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் 111கோடி மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளதாகவும் அவற்றில் 42கோடி ஆதார் எண்கள் வாங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார், மாதம் ஒன்றுக்கு 2கோடி ஆதார் எண்கள் வங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Tags: Aathaar Pay, Cashless Transaction, tamil tech news.,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *