ஆப்பிள் நிறுவனத்தின் டச் பார் அம்சம் கொண்ட மேக்புக் ப்ரோ இந்தியாவில் வெளியாகி லேப்டாப் வர்கத்தின் தலைப்பு செய்தியாக வலம் வந்த வண்ணம் உள்ளது. எனினும், மிகஉயர் விலை கொண்ட இந்த ஹை-எண்ட் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட இந்திய கூட்டத்தினரால் மட்டுமே வாங்க முடியும் என்பது நிதர்சனம்.
மேக்புக் ப்ரோ ஒரு விரிவான மேக் இயக்க முறைமையை வழங்குகிறது என்றாலும் கூட இந்த சாதனம் வெகுஜன நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கானது அல்ல. ஏனெனில் மேக்புக் ப்ரோ -வின் விலை ரூ.1,29,900/- என்ற அளவில் இருப்பதால் ரூ.60,000/- மற்றும் ரூ.80,000/- என்ற பட்ஜெட் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மேக்புக் ப்ரோ கூடுதல் செலவு ஏற்படுத்தும்.
ஆக, இந்த வழக்கில் நீங்கள் புதிய மேக்புக் ப்ரோவை வாங்க முடியாது என்ற பட்சத்தில் ஆப்பிளின் சமீபத்திய நுழைவை போலவே சேவைகளை வழங்கும் அதே சமயம் அதை விட மலிவான விலையில் கிடைக்கக்கூடிய நல்ல மாற்று விண்டோஸ் மடிக்கணினிகள் பற்றிய தொகுப்பே இது.
டெல் எக்ஸ்பிஎஸ் 13
ரூ.76,990/- என்ற விலையில் கிடைக்கும் இந்த கருவியில் ஒரு மிக உயர்ந்த மற்றும் புதிய செயலி உடன் சாதாரண அளவிலான விளையாட்டு மற்றும் பிற காட்சி பயன்பாடுகளுக்கான ஒரு நல்ல கிராபிக்ஸ் அட்டையும் உள்ளது. உலகின் மிகச்சிறிய மடிக்கணினி என்ற பெயரில் சமீபத்திய விண்டோஸ் 10 ஓஎஸ் கொண்டு மடிக்கணினியாகும் மற்றும் பல திரைகள் திறனும் கிட்டத்தட்ட 18 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ள இக்கருவி கனரக மடிக்கணினி பயனர்களுக்கு பொருத்தமானது.
ஏசர் ஆஸ்பியர் எஸ்13
ரூ.83,999/- என்ற விலைகொண்ட இக்கருவி தொடுதிரை அம்சம், 13.3 அங்குல 1080பி ஸ்க்ரீன்,மற்றும் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள், மெல்லிய டிஸ்ப்ளே, 3 யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் ஒரு அழகான திருப்திகரமான சேமிப்பு திறன் ஆகியவைகளை கொண்டுள்ளது. இரட்டை 12 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி – அசுஸ் சென்போன் 3 ஸூம்.!
என்டிஏ, என்ஐஏ பெயரில் வாட்ஸ்ஆப் மால்வேர் லின்க்ஸ், கிளிக் செய்ய வேண்டாம்.! Featured Posts சாம்சங் நோட்புக் 9 ஒரு மிக மெல்லிய மற்றும் இலகுவான சாதனமான இது ரூ.67,000 /- என்ற விலையை கொண்டுள்ளது. 13 அங்குல ஸ்க்ரீன் கொண்ட இக்கருவி மேக்புக் ப்ரோவுடன் ஒப்பீடு செய்யப்படும் மிகசிறந்த கருவியாகும்.
ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13டி
வேலை நிறத்தில் மிகவும் மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பில் வெளியாகும் இந்த கருவி ஆப்பிள் மேக்புக் ப்ரோவுடன் ஒப்பிடும்போது பயனர்கள் செயல்படுத்த எளிதாக இருக்கும். விண்டோஸ் லேப்டாப் இது மேலும் அதன் வழக்கமான 3 யூஎஸ்பி போர்ட், இரண்டு யூஎஸ்பி-சி போர்ட்கள், மேலும் முக்கியமாக ஐ7-6500யூ சிபியூ 8ஜிபி ரேம், 512ஜிபி எஸ்எஸ்டி மற்றும் ஒரு 2560 x 1440 தொடுதிரை, கருவியை 360- டிகிரி சுழற்ற முடியும் அம்சம் ஆகியவைகளை கொண்டுள்ளது.