கம்ப்யூட்டர் பயன்பாட்டில் F4 கீ நமக்குப் பல வகைகளில் பயன்படுகிறது. முதலாவதாக நாம் மூட விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றை எளிதாக மூடிட இதனைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் மூட விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினை முதலில் செலக்ட் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். அந்த புரோகிராம் மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் அதனை மீண்டும் உயிர்ப்பித்து செலக்ட் செய்திடலாம். அல்லது டாஸ்க் பாரில் உள்ள அதன் கட்டத்தை செலக்ட் செய்திடலாம். அதன்பின் Alt+F4 என்ற வகையில் கீகளை அழுத்தினால் அந்த புரோகிராம் மட்டும் மூடப்படும்.

இரண்டாவதாக நீங்கள் ஒரே ஒரு அப்ளிகேஷன் புரோகிராமை இயக்கிப் பல டாகுமெண்ட்டுகளைத் திறந்து வைத்து இயங்குவதாக வைத்துக் கொள்வோம். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பினைத் திறந்து அதில் பல டாகுமெண்ட் பைல்களைத் திறந்திருக்கிறீர்கள். அப்போது Ctrl+F4 அழுத்தினால் திறந்திருக்கும் விண்டோ மட்டும் மூடப்படும்.

புரோகிராம் முழுவதும் மூடப்பட மாட்டாது. F4 கீயினை விண்டோஸ் சிஸ்டத்தை மூடிடவும் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்களையும் முதலில் மூடிவிடுங்கள். இதனை உறுதிப்படுத்திக் கொண்டு பின் Alt + F4 அழுத்தினால் விண்டோஸ் இயக்கம் ஷட் டவுண் செய்யப் படும்.

Tags: Tamil computer Tips, Uses of F4 Key, Function Key Uses, Computer Tips.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *