வீடியோ மூலம் சாட்டிங் செய்யக்கூடிய பல அப்பிளிக்கேஷன்கள் இன்று காணப்படுகின்ற போதிலும் கூகுள் நிறுவனம் தனது புதிய அப்பிளிக்கேஷனையும் அண்மையில் வெளியிட்டிருந்தது.
Duo எனும் இந்த அப்பிளிக்கேஷனில் வீடியோ சட்டிங் வசதி மட்டுமே தரப்பட்டிருந்தது.
எனவே இதில் மேலும் சில புதிய அம்சங்களை வழங்கி பயனர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றது கூகுள்.
இதன் அடிப்படையில் வீடியோ சட்டிங் மட்டும் அல்லாது குரல் வழி அழைப்புக்களை மட்டும் ஏற்படுத்தக்கூடிய வசதியினையும் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த தகவலை கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் Amit Fulay என்பவர் தனது கூகுள் பிளஸ் தளத்தினூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்படவுள்ள ஏனைய வசதிகள் தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை.
அதே நேரம் மேற்கண்ட வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்வதன் மூலம் அவ் வசதியினை அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை Google Duo அப்பிளிக்கேஷன் அன்ரோயிட் மற்றும் அப்பிள் சாதனங்களுக்காக மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags: Video – Audio Apps, Google Duo App, Video Chatting Application, Android App, Free Tamil Tech Android App.