வாட்சப் ஐ சமீபத்தில் திறந்த அனைவருக்கும் புதிய விண்டோ ஒபன் ஆகியிருக்கும். அதில் agree என்ற பட்டன் இருந்திருக்கும். நம்மில் பலர் வழக்கம் போல் என்ன ஏது என படிக்காமல் agree கொடுத்திருப்போம்.

வாட்சபில் உள்ள உங்களது அனைத்து அந்தரங்க (Privacy) தகவல்களையும் ஃபேஸ்புக்கிற்கு தாரை வார்க்கத் தான் அந்த ஒப்புதல். நீங்கள் யார் யாருடன் உறவு வைத்துள்ளீர்கள் யார் யாருடன் எப்படி பேசுகின்றீர்கள்.

உங்களது மன நிலை எப்படி பட்டது என உங்களது அந்தரங்க விசயங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் வாட்சப் மூலம் ஃபேஸ்புக் கண்காணிக்க தான் இந்த ஒப்புதல். இதன் மூலம் வாட்சப் மற்றும் பேஸ்புக் தங்களது விளம்பர வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள போகின்றதாம்

இனி வாட்சப்பில் உள்ள உங்களது அந்தரங்க தகவல்களும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வாட்சப்பை ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. அப்பொழுது வாட்சப் பயனர்களின் தகவலை நாங்கள் ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம் , பயனர்களின் ப்ரைவசிக்கு எந்த பாதிப்பும் வராது என வாட்சப் உறுதி அளித்தது.

ஆனால் அந்த வாக்குறுதியை வாட்சப் தற்போது மீறியுள்ளது. வாட்சப்பின் இந்த புதிய செயலுக்கு எதிராக வாட்சப் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. (http://www.ibtimes.co.uk/whatsapp-facebook-data-sharing-plan-investigated-by-uk-information-commissioner-1578315)

ibtimes quoted as follow:

The UK’s data privacy regulator is to investigate WhatsApp’s recent changes to its privacy policy, which will lead it to share user information with its parent company Facebook.WhatsApp, which has around one billion users, recently announced that it will begin sharing users’ data – including phone numbers – with Facebook to assist in targeting adverts to Whatsapp users and improve friend requests on Facebook.

(நம்ம இந்தியா காரர்களில் பெரும்பான்மையோருக்கு privacy என்றாலே என்னவெனத் தெரியாது அதனால் நம் நாட்டில் வழக்கு தொடர்வது கடினம் தான்)

வாட்சப் மூலம் உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை ஃபேஸ்புக் கண்காணிக்காமல் இருக்க வழி உள்ளது. காணோளியை பார்க்கவும். 30 நாட்களுக்கு இதை செய்தாக வேண்டும்.

ஏற்கனவே தெரியாமல் Agree பட்டனை அழுத்தியவர்கள் இரணடாது வழிமுறையை கையாளவும்.

இன்னும் agree பட்டனை அழுத்தாதவர்கள் முதல் வழிமுறையை கையாளவும்.

உலக அளவில் பலர் வாட்ஸ்அப் இல் இருந்து விலகி வாட்சப்பிற்கு நிகரான டெலிகிராம் என்ற app க்கு மாறி வருகின்றனர்.

காணொளி:
[youtube https://www.youtube.com/watch?v=V7-JzeaNc1k]

Tags: Whatsapp News, Tamil Tech News, Whatsapp-Facebook, Whatsapp Tips and Tricks.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *