தினமும் இணையம் பயன்படுத்தும் நாம் அதிக அளவில் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு நாம் இரண்டு விதமான பதிவிறக்குபவர்களை (downloader) பயன்படுத்த வேண்டியுள்ளது.

ஒன்று டைரக்ட் டவுன்லோடர் (அர்பிட், பிளாஷ் கெட், டவுன்லோட் அக்சிலேட்டர் பிளஸ், ப்ரீ டவுன்லோட் மேனேஜர்,..). அதாவது 100 மெகா பைட்டு குறைவாக உள்ள ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவது.

utorrent payanpaduthum murai

இவ்வகை டவுன்லோடர்கள் பைல்களை ஒரு பரிமாறியிலிருந்து (செர்வெர்) மட்டுமே பதிவிறக்கம் செய்யும். அது மட்டும் இல்லாமல் ஒரு சில கோப்புளின் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி பின்னர் தரவிறக்கம் செய்ய முடியாது.

இரண்டாவது டோர்ரன்ட் டவுன்லோடர் (பிட்டோர்ரன்ட் ,யுடோர்ரன்ட், பிட்கோமெட்,…). இவை 100 மெகா பைட்டுகளுக்கு மேல் உள்ள கோப்புகளை அதாவது படம், திருட்டு மென்பொருள், நிகழ்பட விளையாட்டுகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுத்துகிறோம். இந்த வகை டவுன்லோடர்களை பற்றி இப்போது பார்ப்போம்.

பிட்டோர்ரன்ட் எனபது பியர்-டு-பியர் (peer-peer) வரைமுறை (protocol). பெரிய அளவு கோப்புகளை பகிர உபயோகிக்கப் படுகிறது. இதை 2001-ல் உருவாக்கியவர் பிராம் கோகென். இவர் தற்போது பிட்டோர்ரன்ட் இன்கார்ப்பரேஷ்ன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் இரண்டு இலவச மென்பொருள்களை தருகிறார்கள். ஒன்று பிட்டோர்ரன்ட். இன்னொன்று யூடோர்ரன்ட். இந்த டவுன்லோடர்களை பயன்படுத்தி கோப்புகளை பதிவிறக்க மட்டுமின்றி மேலேற்றவும் (upload) செய்யலாம்.

டோர்ரன்ட் டவுன்லோடர் வைத்து பதிவிறக்கம் செய்யப்படும் கோப்புகள் சிறு சிறு பாகங்களாக (pieces) பிரிக்கப் பட்டிருக்கும். டோர்ரன்ட் டவுன்லோடர், பதிவிறக்கம் செய்யப்படும் கோப்புகளின் பாகங்கள் உலகில் எந்தெந்த கணிப்பொறியில் (peers) உள்ளது என்று இணையதளம் மூலம் கண்டுபிடித்து பின்னர் அதை தரவிறக்கம் செய்யத் தொடங்கும்.

ஒரு பாகத்தை தரவிறக்கம் செய்த கணிப்பொறி மற்ற கணிப்பொறிகளை தன்னிடம் உள்ள பாகத்தை தரவிறக்கம் செய்ய அனுமதிக்கும். இவ்வாறு கோப்புகள் தேவைப்படும் அனைத்து கணிப்பொறிகளிலும் தரவிறக்கம் செய்கின்றன.

கோப்புகளை டோர்ரன்ட் மூலமாக தரவிறக்கம் செய்ய நாம் முதலில் அதற்குரிய டோர்ரன்ட் கோப்புகளை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த டோர்ரன்ட் கோப்புகளை நாம் www.torrentz.com, www.thepiratebay.org, www.torrentreactor.net, www.kickasstorrents.com போன்ற டோர்ரன்ட் இணையத் தளங்கள் மூலம் தரவிறக்கம் செய்யலாம். இந்த டோர்ரன்ட் பைல் நாம் தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்புளின் அளவு, ஒவ்வொரு பாகத்தின் அளவு மற்றும் கோப்பு இருக்கக் கூடிய உரலி போன்றவற்றை வைத்திருக்கும்.

டோர்ரன்ட் பைல்ளை டவுன்லோட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

1. பியர்ஸ்/சீடர்ஸ், லீச்சர்ஸ். இவை இரண்டும் அதிக எண்ணிக்கையில் இருந்தால், தரவிறக்கம் மிக வேகமாக நடக்கும்.

2. இன்னொரு முக்கியமான விஷயம் கருத்துக்கள். ஏற்கனவே தரவிறக்கம் செய்த பயனர்களின் கருத்துக்கள். இவை தான் அந்த டோர்ரன்ட்டை தரவிறக்கம் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.

டோர்ரன்ட் டவுன்லோடரில் செய்ய வேண்டிய அமைப்புகள்:

1. கோப்புகளின் பேண்ட்வித் அலகேஷன்-ஐ ஹை(high) என்று அமையுங்கள்.

2. தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகளை தேர்வு செய்தவுடன், அதற்குரிய விவரங்கள் கீழே 7 விதமான டாப்களில் (tab) தெரியும். அதில் ஃபைல்ஸ் டாப்பை தேர்வுச் செய்து பின்னர் டவுன்லோட் செய்யப்படும் ஃபைல்களை ரைட் கிளிக் செய்து அதன் ப்ரியாரிட்டி-யை ஹை(high) என்று வைக்கவும்.

3. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது, எந்த கோப்பு முதலில் தேவைப்படுகிறதோ அதனை வரிசையில் முதலில் வருமாறு வையுங்கள்.

4. இரவு அல்லது குறிப்பிட்ட நேரம் மட்டும் தரவிறக்கம் இலவசமகா இருந்தால் Options-> Preference ->Schedular சென்று உங்கள் இலவச தரவிறக்க நேரத்தை வையுங்கள். பின்னர் பதிவிறக்கங்கள் தானாகவே நேரம் முடிந்தவுடன் நின்றுவிடும்.

5. முக்கியமான ஒன்று. மேலேற்றும் அளவை (upload limit) குறைக்காதீர்கள்!! நாம் அனைவரும் செய்யக் கூடிய ஒரு தவறு இது. அவ்வாறு குறைத்தால் நம்முடைய தரவிறக்கம் வேகம் மறைமுகமாக குறைய வாய்ப்பு உள்ளது. பியர்-டு-பியர் தொடர்பில் முக்கியமான ஒன்று அப்லோடிங் எனவே அப்லோட் லிமிட்டை குறைக்காதீர்கள்.

ஏனெனில் ஒரு பாகம் தரவிறக்கம் செய்யப்பட்டால், நம் கணினி பரிமாறியாக (server) மற்றவர்களுக்கு செயல்படும். அனைவரும் அப்லோட்-ஐ நிறுத்தி விட்டால், நமது தரவிறக்கம் நேரம் அதிகமாகும். பிறகு அனைவரும் ஒன்று அல்லது இரண்டு லீச்சர்ஸில் (மூல பரிமாறிகள்) இருந்தே தரவிறக்கம் செய்ய வேண்டியது இருக்கும். இதனால் டோர்ரன்ட் உபயோகப்படுத்தும் அனைவருக்கும் தரவிறக்கத்தில் நேர தாமதம் ஆகும்.

6. கோப்பினை தரவிறக்கம் செய்த பிறகு அப்லோடிங்/ சீடிங்-ஐ நிறுத்தி விடுங்கள்.

டோர்ரன்ட் தரவிறக்கத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். தரவிறக்கம் முடியும் முன் கணிப்பொறி சட்டென்று நின்றாலோ அல்லது டோர்ரன்ட் டவுன்லோடரை மூடினாலோ, தரவிறக்கம் ஆகிக் கொண்டிருகும் கோப்புகளுக்கு எந்த பாதிப்பும் வராது. அடுத்த முறை டோர்ரன்ட் டவுன்லோடரை இயக்கும் பொழுது, அதுவாகவே ரீ-செக் செய்து பின்னர் அந்த கோப்பின் மீதி உள்ள பாகங்களை தரவிறக்கம் செய்யும்.

டிஸ்கி:

1. உலகில் அதிகமாக உபயோகிக்கும் டோர்ரன்ட் டவுன்லோடர் யூடோர்ரன்ட் ஆகும்.

2. டோர்ரன்ட் டவுன்லோடர் எல்லா பேண்ட்வித்தையும் எடுத்துக் கொள்ளும் அதனால் உங்களால் இணையத்தை உலாவ இயலாது. எனவே உலாவும் பொழுது மட்டும் டோர்ரன்ட் டவுன்லோடரை மூடி விடுங்கள்.

3. ஆங்கிலத்தில் ‘டோர்ரன்ட்’ என்றால் அதிக விசையுடனும் ஓடும் ஓடை என்று பொருள். (நாமும் நமது இயக்குனர்கள் எந்த ஆங்கிலப் படத்தில் இருந்து தங்களது படத்திற்கு கதையை சுட்டார்கள் என விரைவாக இவ்விணைய ஓடையின் மூலமாக உறுதிபடுத்திக் கொள்ளலாம்.)

Tags: Free Torrent Downlaoder, free Software information, download Manager, Tamil Tech news, Utorrent.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *