ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் 2017 ஐபோனில் டூயல் சிம் வழங்குவது உறுதியாகி உள்ளது.
டூயல் சிம் ஸ்லாட்

apple iphone dual sim tamil

ஆப்பிள் ஐபோன் 7-ல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கபடவில்லை இந்நிலையில் அடுத்த ஆண்டு வெளிவர உள்ள ஐபோன்களில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரே மொபைல் சாதனத்தில் இரு வேறு ஆண்டனாக்களை இயக்குவதற்கான உரிமத்தை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. இதனால் இனிவரும் ஐபோன்களில் டூயல்சிம் ஸ்லாட் வழங்குவது உறுதியாகி உள்ளது.

அடுத்தாண்டு வெளியாக உள்ள ஐபோனில் ஓ.எல்.இ.டி வகை டிஸ்பிளே, வளைந்த கிளாஸ் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டூயல் சிம் ஸ்லாட்டில் 4ஜி எல்இடி தொழில்நுட்பம் வழங்கப்படும். தொடர்ந்து ஐபோன் 8-ல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுமா என்பது உறுதிபடுத்தப்பட வில்லை.

Tags: Apple News, Tamil Tech News, Apple Dual Sim, apple iphone 7.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *