வீடியோ கால்களை ஏற்படுத்தவும், தகவல்களை பறிமாறக் கொள்ளவும் இரு வேறுபட்ட புதிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள்.

Duo செயலி வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவகிறது. ஆலோ செயலி மூலம் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள முடியும். எண்ணங்களை டெக்ஸ்ட்டாக பகிர்ந்துகொள்ள முடியும்.

allo duo

வாட்சப், imo வைப் போல இரு செயலிகளும் செயல்படும். இந்த வசதி இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனினும் முன் பதிவு செய்துகொள்ளலாம். பயன்பாட்டுக்கு வந்த பிறகு உடனடியாக இவ்வசதியை பெற இந்த முன் பதிவு பயன்படும்.

இவ்வசதியைப் பெற கூகிள் அக்கவுண்ட் இருக்க வேண்டிய அவசியமில்லை. வாட்சப்பில் மொபைல் நம்பர் கொடுப்பது போல, இதிலும் மொபைல் நம்பரை கொடுத்தால் கணக்கை உருவாக்கிக்கொள்ள முடியும்.

End-to-End Encryption முறை செயல்படுத்தப்படுவதால் இந்த வசதிகள் மூலம் நீங்கள் பகிரும் தகவல்களை எவர் ஒருவராலும் கண்காணிக்க முடியாது.

இந்த இரு செயலிகளையும் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு செய்ய:

ஆலோ ஆன்ட்ராய்ட்
டுவோ ஆன்ட்ராய்ட்

Tags: Free video calling app, android duo video call app, android messenger app allo, allo android app, duo android app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *