தலைப்பை படித்ததும் சமீபத்தில் வழங்கப்பட்ட 4ஜி இலவச இண்டர்நெட் என நினைக்க வேண்டாம். இங்கு எவ்வித சிரமமும் இன்றி 3ஜி டேட்டா ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை தான் தொகுத்திருக்கின்றோம்.

free airtel internet activation

இன்று நாம் பயன்படுத்தும் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஓரளவு அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக ஏர்டெல் அறியப்படுகின்றது.
மேலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நிறுவனமாகவும் ஏர்டெல் இருக்கின்றது.

சர்ச்சைகள் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று ஏர்டெல் சேவையை பயன்படுத்தி இலவச டேட்டா பெறுவது எப்படி என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..
டேட்டா

முன்பு குறிப்பிட்டிருந்ததை போன்று ஏர்டெல் சேவையில் சுமார் 500 எம்பி வரையிலான 3ஜி டேட்டாவினை இலவசமாக பெறுவது எப்படி என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

பேலன்ஸ்

இதற்கு உங்களிடம் ஏர்டெல் 3ஜி சிம் கார்டு மற்றும் குறைந்தபட்சம் 50 எம்பி டேட்டா இருக்க வேண்டும்

லின்க் பின் http://3gdongle.airtel.in/ இந்த இணைய முகவரிக்கு சென்று உங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

தகவல்கள்

இணையதளத்தின் இடது புறம் இருக்கும் Add Alternate Contact Details என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இதை க்ளிக் செய்தால் மாற்று தகவல்களை பதிவு செய்ய கோருவது ஆகும்.

மாற்று தகவல்

இங்கு உங்களின் மாற்று அதாவது வேறு மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து Submit அதாவது பதிவு செய்த தகவல்களை சமர்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

கடவுச்சொல்

மாற்று தகவல்களை பதிவு செய்தவுடன் உங்களது மாற்று மொபைல் நம்பருக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் அனுப்பப்படும்.

உறுதி

வெரிஃபிகேஷன் வழிமுறைகளை உறுதிப்படுத்த உங்களுக்கு அனுப்பப்பட்ட கடவுச்சொல்லினை பதிவு செய்ய வேண்டும்.

குறுந்தகவல்

கடவுச்சொல் பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்டதும் உங்களது மொபைல் நம்பருக்கு அனைத்து வழிமுறைகளையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்ததை விளக்கும் குறுந்தகவல் வரும்.

ஏர்டெல்

அனைத்து வழிமுறைகளும் வெற்றிகரமாக முடிந்ததும் உங்களது ஏர்டெல் நம்பருக்கு 500 எம்பி இலவச 3ஜி டேட்டா கிடைத்து விடும்

டாங்கிள்

இந்த வழிமுறையானது ஏர்டெல் டாங்கிள் பயன்படுத்த மட்டுமே செல்லுபடியாகும். ஏர்டெல் சிம் கார்டு இல்லாமல் மற்ற நெட்வர்க்களில் இது வேலை செய்யாது.

ஆதாரம்: Tamil Gizbot

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *