குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் கிடைக்கும் இந்த காலத்தில்தான், அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களும் உருவாக்கப்படுகிறது.
பயனர்களின் தேவைகள் மற்றும் வசதிகளுக்கேற்ப – போன்கள் வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன் விலை பல லட்சங்களை தாண்டும்.

costly camer in the world

அப்படியென்ன மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத அம்சங்களை இது கொண்டிருக்கும் என நினைப்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக  இதில் தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ  துறையில்  பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=tE-aeg9NVfQ] இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய அம்சங்கள்:

  •  24 மெகாபிக்சல் கேமரா
  •  5.5 ஐபிஎஸ் LED 2k தீர்மானம், லேசர் ஆட்டோ ஃபோகஸ்
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ராய்டு 5.1.1
  •   குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810  செயலி
  • பேட்டரி: 4000 mAh
  • கை விரல் சென்சார்
  •  பாதுகாப்பு கேடயம் பாதுகாப்பு ஸ்விட்ச் செயல்படுத்தப்படுகிறது
  •  பாதுகாப்பான அழைப்புகள்  மற்றும்  என்கிரிப்சன் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள்
  • நினைவகம்: ரேம் 4GB, சேமிப்பு 128 ஜிபி

By admin

One thought on “உலத்திலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *