ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், ஜெப்ஸ்டேஷன் 2 என்ற புதிய மாடல் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. 1200mAH பேட்டரி கொண்ட இது அலாரம், ப்ளூடூத், எஃப்.எம்.ரேடியோ உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

ஜீப்ரானிக்ஸின் ஜெப்ஸ்டேஷன் ஸ்பீக்கருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து புதிய ஜெப்ஸ்டேஷன் 2 சந்தைக்கு வருகிறது. குறைந்த எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கரை சிறிய இடத்தில் வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

speaker with bluetooth

பேட்டரியால் இயங்கும் இந்த ஸ்பீக்கர் கைக்கு அடக்கமானது. எடுத்துச் செல்ல கைப்பிடியும் கொடுக்கப்பட்டுள்ளது. அலாரம் வசதியோடு, முன்னரே குறிப்பிட்ட நேரத்தில் ஸ்பீக்கர் தானாக நிற்கும்படி செய்யும் வசதியும் உள்ளது.

எல்.ஈ.டி டிஸ்ப்ளேவுடன் கூடிய இதில் USB பென்டிரைவ் அல்லது SD/MMC கார்டை இணைக்கலாம். ப்ளூடூத்3.0 அம்சமும் கொண்டுள்ளது.

மேலும் இதில் உள்ள ஆக்ஸிலரி இன்புட் போர்ட் உதவியால், இந்த ஸ்பீக்கருடன் கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்லெட்டுகள், DVD ப்ளேயர் போன்ற உபகரணங்களையும் இணைக்கலாம். ஒரு வருட உத்திரவாதத்துடன் வரும் ஜெப்ஸ்டேஷனின் விலை ரூ. 4899/-

ஆதாரம்: தி இந்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *