இணையத்தில், ஆங்கிலத் திரைப்படம் பார்க்க தேடிப் பிடிக்கவே ஒன்றரை மணி நேரம் ஆகிவிடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா? இதற்கென ஒரு இணையதளம் வந்திருக்கிறது.

film fish humn movie recommeded

‘பிலிம்பிஷ்’ என்ற இந்த இணையதளத்தை இயக்குவது மென்பொருள் அல்ல; அசல் னிதர்கள்! ஆங்கிலப் பட பிரியர்கள், இந்த தளத்தில் தங்களுக்கு பிடித்த படங்களின் வகைகளை தேர்ந்தெடுத்து விட்டால், தளத்தின் பணியாளர்கள், அடுத்து நீங்கள் என்ன படம் பார்க்கலாம், அந்தப் படத்தை இணையத்தில் எங்கே, ‘ஸ்ட்ரீம்’ செய்யலாம் என்பது போன்ற தகவல்களை, ஒரு பட்டியல் வடிவில் தருகின்றனர்.

காதல் படங்கள், நடன படங்கள், சண்டை படங்கள் என்று ரகவாரியாக பட்டியல்கள் கிடைக்கும். பட்டியலுடன், அந்தப் படங்களுக்கு வேறு தளத்தில் இருக்கும் விமர்சனங்களையும் இணைப்பாக தருகின்றனர். ஹாலிவுட் படங்கள், வெகுஜன ரசனைக்கு மாறுபட்ட பரிசோதனை படங்கள் என்று ரகவாரியாக பார்த்து ரசிக்க, பிலிம் பிஷ் உதவுகிறது.

இணையதளத்தின் முகவரி: https://www.film-fish.com/

Source: தினமலர்.காம்.

By admin

One thought on “ஆங்கிலப் படங்களை இலவசமாக பார்க்க உதவும் இணையதளம் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *