இணைய பெருவெளியில் உங்களைப் பற்றிய தகவலகளை கொடுத்தால் அது, சில நேரங்களில் வினையாகி போவதுண்டு. உதாரணமாக, உங்களுடைய மொபைல் எண்ணை இணையத்தில் பயன்படுத்தியிருந்தால், அதற்கு வரும் விளம்பர SMS களை கூறலாம்.

email phone sms

மொபைல் நம்பரை போலவே மின்னஞ்சல் முகவரிகளுக்கும் தேவையில்லாத வியாபார – விளம்பர தொடர்புடைய மின்னஞ்சல்கள் வந்து சேரும்.

இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வி எழலாம்.

இணையத்தில் உலவும்பொழுது, சில வெப்சைட்களில் கணக்குகளை தொடங்க (Sign Up) சொல்வார்கள். அவற்றிக் கேட்கப்படும் விபரங்களில் மிக முக்கியமானவையாக மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை கொடுக்கச் சொல்லி கேட்டிருப்பார்கள். அந்த கட்டங்களில் அவற்றை நிரப்பி வெப்சைட்டுகளில் கணக்கை தொடங்கியிருப்பீர்கள்.

இங்குதான் வருகிறது வினை. இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதாக அந்த வெப்சைட்கள் உறுதி அளித்தாலும், 99% வெப்சைட்கள் அப்படிச் செய்வதில்லை. அல்லது அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் சர்வரில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு, வியாபார நிறுவனங்களுக்கு விற்கபட்டுவிடும்.

இதனால் தான் தேவையில்லாத SMS – விளம்பரங்கள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும், மொபைல் எண்ணுக்கும் வந்துவிடுகின்றன.

இவ்வாறு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இணையச் செயல்பாட்டின்போது, வெப்சைட்கள் கேட்கும் விபரங்களில் தற்காலிக மின்னஞ்சல், தற்காலி மொபைல் நம்பர்களை கொடுத்து, அந்த வெப்சைட்களில் கணக்கை தொடங்கி பார்வையிடுவதுதான் ஒரே வழி. அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சல், மொபைல் எண்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் காலாவதி (Expire in Few Days) ஆகிவிடும்.

அதற்கென உதவுகிறது சில வெப்சைட்டுகள்.

தற்காலிக இமெயில் ஐடி உருவாக்க உதவும் வெப்சைட்: 

தற்காலிக மொபைல் நம்பர்களை வழங்கும் வெப்சைட்கள்:

இந்த மூன்று வெப்சைட்கள் மூலம் தற்காலிகமான மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களைப் பெற்று, வெப்சைட்களில் கேட்ப்படும் மின்னஞ்சல் முகவரி, மற்றும் மொபைல் எண்களுக்கான கட்டத்தில் கொடுத்து அந்த வெப்சைட்டுகளை பயன்படுத்தலாம்/ பார்வையிடலாம். இதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்களுக்கு வரும் SMS கள் மற்றும் விளம்பரங்களை தடுக்க முடியும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *