இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே மொபைல் மூலம் தூர்தர்சன் டி.வி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். ஸ்மார்ட்போன் பயனர்கள் கவரும் விதமாக தூர்தர்ஷன் இலவசமாக இந்த சேவையை வழங்குகிறது. சென்னை உட்பட, தமிழகத்தில் 15 நகரங்களில் இந்த இலவச சேவை கிடைக்கும்.
![]() |
மொபைலில் இலவச டிவி |
இலவச மொபைல் டிவி
ஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்ளெட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பயன்படுத்தி தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காண முடியும்.
டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் கருவி
இந்த டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் கருவியானது பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கின்றது.
இலவச மென்பொருள்
வாடிக்கையாளர்கள் தேவையான மென்பொருளை பதிவிறக்கம் செய்து, டாங்கிள்களை ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் கருவிகளில் பொருத்தி தூர்தர்ஷன் சிக்னல்களை பெற முடியும்.
முற்றிலும் இலவசம்
தூர்தர்ஷன் சேனல்களை பார்க்க எவ்வித கட்டணமும் கிடையாது. மேலும் மென்பொருளை இன்ஸ்டால் செய்த பின் இண்டர்நெட் சேவையும் தேவையில்லை.
எந்தெந்த சேனல்கள் பார்க்கலாம்?
டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி ரீஜினல், டிடி கிசான் போன்ற சேனல்களை கண்டு ரசிக்க முடியும்.
கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. ஒரு முறை டாங்கிள் வாங்கினால் போதும், அதன் பின் இண்டர்நெட் உதவியின்றி சேனல்களை பார்க்க முடியும்.