பாதுகாப்பாற்ற இணையதளங்களைக் கண்டுபிடித்து அது பற்றி எச்சரிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

உலகின் பிரபல தேடுதல் இயந்திரம் கூகுள். பெரும்பாலான மக்கள் இதன் மூலம் தான் பல்வேறு இணையதளங்களை தேடுகின்றனர். இணையதள பயன்பாட்டாளர்களைப் பற்றிய விபரங்களை திருடி, அவர்களது வங்கி கணக்கு, கிரடிட் கார்டு எண் போன்ற விபரங்களை அறிந்து கொள்கின்றன.

google website protection

இதைப் பயன்படுத்தி, பொதுமக்களின் பணம் திருடப்படுகிறது. இதற்கென்றே பல இணையதளங்கள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட இணையதளங்கள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவதில்லை.

இந்நிலையில் பாதுகாப்பாற்ற இணையதளங்கள் பற்றி ஆய்வு செய்து, கண்டுபிடிக்கும் முறையை கூகுள் உருவாக்கி உள்ளது. ”கூகுள் பாதுகாப்பு பிரவுசிங் டெக்னாலஜி‘ என இந்த தொழில்நுட்பம் அழைக்கப்படும். 

ஒவ்வொரு நாளும் இந்த பாதுகாப்பு பிரவுசர், லட்சக்கணக்கான இணையதள முகவரிகளை (யுஆர்எல்) ஆராய்ந்து, பாதுகாப்பற்ற இணையதளங்களை கண்டுபிடிக்கும்.இந்த ‘டுபாக்கூர்’ இணையதளங்களை பொதுமக்கள் தேடினால், அது பற்றி கூகுள் எச்சரிக்கும். கூகுள் தவிர, மோசில்லா .பயர்பாக்ஸ், ஆப்பிள் சபாரி ஆகிய தேடு பொறிகளிலும் இந்த எச்சரிக்கை வௌியிடப்படும்.

Source :dinamalar.

By admin

One thought on “தகவல் திருடும் வெப்சைட்டுகளை காட்டிக்கொடுக்கும் கூகிள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *