மொபைல் போன்களில், தமிழில் எழுதத் துணை புரியும் சொற்செயலியான “செல்லினம்”, அண்மையில் கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கையில் 5 லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sellinam tamil seyali
செல்லினம் – தமிழ் டைப் செய்யும் செயலி

கூகுள் பிளே தளத்தில், 2012 ஆம் ஆண்டு இந்த செயலி, இலவசத் தரவிறக்கத்திற்கான வாய்ப்புடன் வெளியிடப்பட்டது. சராசரியாக, நாள் ஒன்றுக்கு 500 பேர் இதனைத் தரவிறக்கம் (500 downloads per day) செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

முதன் முதலில், 2005 ஆம் ஆண்டில், நோக்கியா மொபைல் Nokia Mobile Phone போன்களில், தமிழில் எழுதவென, செல்லினம் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டில், ஆப்பிள் சாதனங்களுக்காக Apple Devices, சிறப்புப் பதிப்பாக வடிவமைக்கப்பட்டது.

பின்னர், எச்.டி.சி. நிறுவனத்தின் மொபைல் போன்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே(HTC Mobile Phone OS), செல்லினம் செயலி இணைக்கப்பட்டு, போனில் மாறா நிலையில் தரப்பட்டது.

எச்.டி.சி. மொபைல் போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கியதால், இந்த நிறுவனப் போன்களில் இயங்கிய செல்லினம், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் Android Operating System இயங்கும் செயலியாக உருவெடுத்தது. பின்னர், 2012 ஆம் ஆண்டில், கூகுள் பிளே தளத்தில் பதிந்து தருவதற்கென, இன்றைய வடிவமைப்பில் தரப்பட்டது.

தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட இந்த செயலி, 5 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் தரவிறக்கம் (5 Lakhs Download) செய்யப்பட்டுள்ளது, ஸ்மார்ட் போன்களில், தமிழில் டைப் செய்திட உதவிடும் செயலியான இதன் பயன் சிறப்பை உறுதி செய்கிறது.

செல்லினம் செயலியை அதிகம் பயன்படுத்துவது, இந்தியாவில் தான். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பயனாளர்களே (Users of Tamil Nadu )மிக அதிகமாக இதனைத் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளில் உள்ளோர் இதனைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. உலகெங்கும் தமிழ் பயன்படுத்தப்படும் அனைத்து நாடுகளிலும் இந்த செயலி பயன்பட்டு வருகிறது.

செல்லினம் செயலியைத் தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *