கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் திறமை இருந்தால் போதும். நினைத்ததை உருவாக்கி காட்டி விடலாம்.

அந்த வகையில் நல்லதொரு கற்பனை வளத்தோடு அற்புதமாக அமைக்கப்படுவைதான்  “ஹோனோமோபோ” எனப்படும் கப்பல் கன்டெய்னர்களால் உருவாக்கப்பட்ட வீடுகள்.

Honomobo house

இந்த வகையில் வீடுகளில் 4 பேருக்கு தேவையான அறைகள், தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது. இதில் உள்ள வசதிகளை பார்த்தால் இது ஒரு ஹைடெக் வீடு என்று சொல்ல முடியும். அந்தளவுக்கு நிறைய வசதிகளுடன் நேர்த்தியாக உருவாக்கி கொடுக்கின்றனர். இத்தகைய வீடுகளை கட்டமைத்து தருபவர்கள் கனடாவைச் சேர்ந்த ஹோனோமோபோ நிறுவனத்தினர்.

இடம் பற்றாக்குறை என்றால், வீட்டிற்கு மேல் ஒரு அடுக்கு மாடி வைத்து கொடுக்கின்றனர். இதனை உருவாக்க ஆகும் செலவும் கொஞ்சம் அதிகம்தான். ஆர்டர் கொடுத்தால் போதும். வீட்டை உருவாக்கி வந்து கொடுத்து விடுகின்றனர். எந்த காற்றுக்கும், மழைக்கும் அசைந்து கொடுக்காத வகையில் கட்டமைப்பு இருப்பது பிரமிக்க வைக்கிறது. தேவைப்பட்டால், மின்சாரத்திற்காக சூரிய மின் தகடுகளை பொருத்தி கொடுக்கின்றனர்.

இதை “மூன் வகை” வீடுகள் எனவும் அழைக்கின்றனர். இதன் சிறப்பம்சமே, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கண்டெய்னர்கள் ஏற்றிச் செல்லும் வாகனம் மூலம் எடுத்துச் செல்லலாம் என்பதுதான். சுருக்கமாக சொல்வதென்றால், குட்டி வீடு… அழகான வீடு!

ஒரு சில ஹோனோமோபோ டைப் வீடுகளின் படங்கள்

மேலும் விரிவாக அறிந்துகொள்ள இந்த இணையதளத்திற்கு செல்லவும்.

Tags: HonoMobo houses, bedroom, bathroom, living room, large kitchen.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *